நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த 2022ம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'டான்'. லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கும் வர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

கடந்த செப்டம்பர் 1ம் தேதி பேச்சுலர் பார்ட்டி ஒன்றை சிபி சக்கரவர்த்தி நடத்தினார். அதில் சிவகார்த்திகேயன், சிவாங்கி உள்ளிட்ட பல நண்பர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள். அதை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி - வர்ஷினி திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் ஈரோட்டில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, அட்லீ, தர்ஷன், சிவாங்கி, இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகின்றன.

*Don* ning the wedding attire. Celebrating wedding reception at RN Pudur, Erode…. Wishing Director @Dir_Cibi a lifetime of love and happiness as he embarks on this new journey with Varshini. May your days be filled with endless joy and cherished memories. #CibiWedsVarshini… pic.twitter.com/A8aO3Ve7Go

— தமிழ் வீதி (@tamilveedhi) September 5, 2024

டான் படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு அமையாமல் போகவே மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.