CHN Corp. Meeting: ஓட்டேரி, விருகம்பாக்கம் மக்களுக்கு இனி மழைக்காலத்துல கஷ்டம் இல்ல.. ரூ.95 கோடியில் திட்டம்...

7 months ago 5
ARTICLE AD

இன்று சென்னையில் நடைபெற்ற மாநராட்சி மன்ற கூட்டத்தில், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய்களை புனரமைக்க தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு, அரசு அனுமதி பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேயர் தலைமையில் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய்களை புனரமைப்பதற்கு, அரசின் ஒப்புதலை பெறுவதாகும்.

ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் புனரமைப்பு

அதன்படி, மழைக் காலங்களில், ஓட்டேரி நல்லா நீர்வழிக் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய்களில் மழைநீர் தங்கு தடையின்றி சீராக செல்ல, இந்த கால்வாய்களை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டேரி நல்லா கால்வாயை புனரமைக்கும் பணிக்கு 65 கோடி ரூபாயும், விருகம்பாக்கம் கால்வாயை புனரமைக்கும் பணிக்கு 30 கோடி ரூபாயும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிக்கு தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின் மதிப்பீட்டுத் தொகையான 95 கோடி ரூபாய்க்கு அரசின் அனுமதி மற்றும் நிதி ஆதாரம் பெறுவதற்கு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது இல்லாமல், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு இந்த வழிகாட்டுதல்களை பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட மேலும் சில தீர்மானங்கள்

ஒரு ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட திட்ட தளங்களில் வெளிப்புற இடங்களில் தூசி, குப்பைகள் பரவுவதை தடுக்க, தகரம், உலோக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். புதிய கட்டுமானம் அல்லது இடிக்கப்படும் கட்டமைப்புகளில் இருந்து வெளியேறும் தூசி, துகள்கள் பரவுவதை தடுக்க, துணி, தார்ப்பாய், பச்சை வலையால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

கட்டுமானத்தின்போது உருவாகும் எந்த ஒரு கழிவுப் பொருட்களையும், திறந்த வெளியில் காற்றில் பரவுவதை தவிர்க்க, மூடப்பட்ட தட்டுகள் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 18 பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், தியாகராய நகர் தொகுதிக்கு உட்பட்ட உஸ்மான் சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு, மறைந்த மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் பெயரை சூட்டுவது உள்ளிட்ட 236 தீர்மானங்கள் இன்றைய மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Read Entire Article