Chidambaram Accident: சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

5 பேர் உயிரிழப்பு:

சிதம்பரம் அருகே பு,. முட்லூர் புறவழிச்சாலையில் காரும், லாரும் நேருக்கு மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் யாசர் அராபத் (40), முகமது அனவர் (56), ஹாஜிதா பேகம் (62), சாராபாத் நிஷா (30) மற்றும் அப்னான் (2) என அடையாளம் காணப்பட்டுள்ளது. சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்தித்துவிட்டு, வீடு திரும்பும்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் அந்த காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல நொறுங்கியது.