தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சேரன். இயக்குனராக நிலையான இடத்தை பிடித்த பின்னர் நடிகராகவும் மாறினார். இவர் இயக்கிய படங்களில் பொற்காலம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

சேரன் தன்னுடைய 2ஆவது படமாக 'பொற்காலம்' படத்தை இயக்கினார். இந்தப் படத்தை காஜா முஹைதீன் தயாரித்தார். இதில் முரளி, மீனா, சங்கவி, மணிவண்ணன், வடிவேலு, டெல்லி கணேஷ், சிஆர் சரஸ்வதி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்தப் படம் வெளியான போது படம் பார்க்க சென்ற அனுபவம் குறித்து காஜா முஹைதீன் கூறியிருக்கிறார்.

பொற்காலம் படம் வெளியான போது சேரன் மற்றும் காஜா முஹைதீன் இருவரும் இணைந்து படம் பார்க்க சென்றுள்ளனர். முதல் நாளில் மட்டும் 10 ஷோக்கள் முடிந்து 11ஆவது ஷோ போடப்பட்டிருக்கிறது. சேரன், மற்றும் காஜா முஹைதீன் இருவரும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் தகாத வார்த்தைகளால் சேரனை வசைபாடியிருக்கின்றனர். இதை காதில் கேட்ட சேரன் திரையரங்கை விட்டு வெளியில் வந்து அழுதிருக்கிறார். பிறகு உள்ளே சென்ற சேரன், தயாரிப்பாளருடன் முழு படத்தையும் பார்த்து முடித்திருக்கிறார். கடைசியாக இருவரும் வீட்டிற்கு செல்ல வெளியில் நின்றிருந்த ஒருவர் தனது நண்பரை பார்த்து என்னை ஏன் இப்படி ஒரு படத்திற்கு அழைத்து வந்த என்று கேட்டிருக்கிறார்.

பின்னர் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். இப்படித்திற்கு இப்படி விமர்சனங்கள் வருவதை தொடர்ந்து முஹைதீன் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார். தன்னை சந்திக்க வந்தவர்களை கூட தவிர்த்துள்ளார். இதே போல் தான் சேரனும் தன்னுடைய வீட்டுக்கு யார் போன் செய்தாலும் அதை எடுக்காமல் தவிர்த்தாராம். 2 நாட்கள் கழித்து முஹைதீன் அலுவலக உதவியாளர் தங்களை பார்ப்பதற்காக விநியோகஸ்தர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் அலுவலகத்தில் வெயிட் பண்ணுறாங்க என்று கூறியிருக்கிறார்.

படம் தோல்வி அடைந்த நிலையில் விநியோகஸ்தர்கள் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முஹைதீனிடம் பணம் கேட்க வந்திருப்பதாக எண்ணிக்கொண்ட முஹைதீன் எல்லா பணத்தையும் கொடுத்து விடுகிறேன் என்று உதவியாளரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து அவர் அலுவலகத்திற்கு சென்று பார்த்திருக்கிறார். அப்போது தான் அவருக்கு விஷயமே புரிந்திருக்கிறது. அதாவது, தங்களுடைய படம் ஹிட் கொடுத்தைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் மாலையுடன் பாராட்டு தெரிவிக்க வந்திருக்கின்றனர். இதற்காகவா 2 நாட்கள் இப்படி செய்தோம் என்று மனதிற்குல் எண்ணிக் வருத்தப்பட்டாராம்.