ஐபிஎல் 2025 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கன்னி வெடியாக இருந்து வருகிறது, மெகா ஏலத்தில் சொதப்பல், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம், அணியில் பாதி வீரர்கள் ஃபார்ம் அவுட் என சிஎஸ்கே அணிக்கு மறக்கக்கூடிய சீசனாக அமைந்துள்ளது.

செட்டாகாத ஓப்பனிங்:

இந்த சீசனில் சென்னை அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்தது அவர்களின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தான், ராகுல்-த்ரிப்பாதி-ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே- ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரசீத்-ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மாத்ரே - ரச்சின் ரவீந்திரா என நான்கு ஓப்பனிங் காம்போக்களை மாற்றியும் சென்னை அணிக்கு தேவையான அதிரடி கிடைக்கவில்லை. 11 போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே 3 முறை மட்டுமே 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.

மங்கிப்போன மிடில் ஆர்டர்:

அடுத்த தலைவலியாக சென்னை அணிக்கு உள்ளது மிடில் ஆர்டர் தான், தீபக் ஹூடா,ஷிவம் துபே, விஜய் சங்கர், ஜடேஜா ஆகிய வீரர்களை வைத்து சிஎஸ்கே இந்த சீசனில் மிகவும் தடுமாறியது, ஆமை வேக பேட்டிங் ஒரே ஒரு ஹிட்டரை வைத்து தடுமாறியது சென்னை அணி, மிடில் ஓவர்கள் ரன் அடிக்க முடியாமல் திணறியதால் தான் சென்னை அணி பலப்போட்டிகளில் சேஸ் செய்ய முடியாமல் தோல்வியடைந்தது.

மாற்றம் தந்த இளைஞர்கள்

இந்த சீசனில் அனைத்து அணிகளும் இளம் வீரர்களை வைத்து களமிறங்கி அசத்தி வருவதால் சென்னை அதை பின்பற்ற வேண்டும் என்ன சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர், தொடர் தோல்விகளுக்கு பிறகு சென்னை அணி இளம் வீரர்களுடன் களமிறங்கியது. 17 வயதான மாத்ரே, 20 வயதான் ஷேக் ரசீத், 22 வயதான டெவால்ட் பிரவிஸ் ஆகியோருடன் களமிறங்கிய பின்னர் சென்னை அணி பேட்டிங்கில் வெற்றி அடைந்து வருகிறது, போராடி கூட வெற்றி பெறாத சிஎஸ்கே அணி கடந்த சில போட்டிகளாக போராடி தோல்வி அடைந்து வருகிறது.

மிஷன் 2026:

ஐபிஎல் 2025 சீசனில் இருந்து சிஎஸ்கே அணி வெளி இருந்தாலும் அடுத்த சீசனுக்கான அணியை தற்போதே தயார் செய்து வருகிறது, ஆயுஷ் மாத்ரே, ரசீத் ஆகியோர் ஓப்பனிங் ஆட தயாராக உள்ளனர், நம்பர்-3 ல் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோர் உள்ள நிலையில் வன்ஷ் பேடி காயத்தால் விலகினாலும் சென்னை அணிக்கு அடுத்த வருடம் நிச்சயம் திரும்பிவிடுவார், தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பையில் 28 பந்துகளில் 100 ரன்கள் அடித்த உர்வில் பட்டேல் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்த நம்பிக்கை அளிக்கும் இளைஞர் பட்டாளம் சிஎஸ்கே அணி அடுத்த வருடம் தரமான பேட்டிங் ஆர்டரை கொடுத்துள்ளது, தோனி அடுத்த வருடம் ஆடுவாரா மாட்டாரா என்கிற குழப்பம் உள்ளது, அதனால் சென்னை அணி அடுத்த வருடம் நடைப்பெறும் மினி ஆக்சனில் ஒரு நல்ல அதிரடி பேட்ஸ்மேனை எடுக்க வேண்டும். அதே போல பந்துவீச்சில் கலீல், அன்சுல் கம்போஜ், நூர் அகமது ஆகியோர் சிறப்பாக செயல்ப்பட்டு வருகின்றனர், பதிரானா தனது பவுலிங்கில் உள்ள சிறு குறைகளை சரி செய்தால் அடுத்த வருடம் சிஎஸ்கே அணி நல்ல சீசனாக அமைய வாய்ப்புள்ளது.