சென்னையில் இன்று இரவு மிதமான மழையும், நாளைமுதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சூழந்த மழை மேகங்கள்:

சென்னையை பொருத்தவரை, காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு, கனமழை பெயவதற்கு தயார்நிலை போல் இருக்கிறது. இந்நிலையில், இன்று இரவு சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

pic.twitter.com/PIGM9G72nC

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 11, 2024

மேலும், நாளை முதல் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த தருணத்தில் தமிழ்நாட்டில் வானிலை குறித்து, வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது

நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

நாளை:

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள்:

தமிழகத்தில் அநேக இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர். தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ராமநாதபுரம், மதுரை விருதுநகர் சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.