Chennai Power Cut: சென்னை மக்களே உசார்! நாளை (25.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது

11 months ago 9
ARTICLE AD

சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக , அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு, எதிர்பாராத மிந்தடை உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.

சென்னையில் நாளை மின்தடை: 25-01-2025

இந்நிலையில், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:TVK District Secretary: வெள்ளி நாணயம் கொடுத்த விஜய்.! 120 தவெக மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

மின்தடை செய்யப்படும் இடங்கள்:

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை திருவான்மியூர் & இந்திரா நகர் பகுதி, தரமணி பகுதி, கனகம், பெரியார் நகர், எம்.ஜி.ஆர் நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் & கனகம்), வேளச்சேரிபார்ட், அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர், விஎஸ்ஐ எஸ்டேட் கட்டம்-I, 100 அடி சாலை பகுதி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரையிலான நேர இடைவேளையில் மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள்:

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.

மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது.

இதனால் பொதுமக்கள், தங்களது நாளைய முக்கிய பணிகளை, இன்றே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Also Read: TVK Vijay: புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிய விஜய்.! தனியாக தவெக நிர்வாகிகளுடன் விஜய் பேசியது என்ன?

Read Entire Article