Chennai News: முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம்; ரூ.11 கோடி மோசடி - 3 பேர் கைது

3 months ago 4
ARTICLE AD

ஆசை வார்த்தை கூறி , இரட்டிப்பு பணம் மற்றும் கடனாக நகைகளை வாங்கி ரூ. 11 கோடி மோசடி

சென்னை வானகரத்தில் போயா கான் ஜீவல்லர்ஸ் என்ற நகைக்கடை நடத்தி வருபவர் ஸ்ரீதேவி ( வயது 50 ). இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் , அண்ணாநகரை சேர்ந்த சுனிதா பிரகாஷ் , அவரது கணவர் பிரகாஷ் மற்றும் அனிதா ஸ்ரீதர், சஞ்சய் சோலங்கி ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர். கடந்த, 2022 பிப்ரவரி முதல் 2024 டிசம்பர் 6 வரை கடனாக 5.13 கோடி 9.5 ரூபாய் மதிப்புள்ள, கிலோ ரூபாய் தங்கம், 1.30 கோடி ரூபாய் மதிப் புள்ள வைர நகைகளை பெற்றனர்.

அத்துடன், முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம் தருவதாக பெற்ற, 4.45 கோடி ரூபாய் என , மொத்தம் 10.89 கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றி விட்டனர். இது குறித்து கேட்ட போது , பிரகாஷிம், சிவகுருநாதனும், என்னை மிரட்டியதோடு , அவதுாறான வார்த்தைகளால் திட்டி துன்புறுத்தினர். எனவே மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் இழந்த தங்க, வைர நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஸ்ரீதேவியை ஏமாற்றும் நோக்கத்தில் நகைகளை பெற்று அதற்கான பணத்தை திரும்ப கொடுக்காமல் , வழக்கறிஞர் சிவகுருநாதன் என்பவர் வாயிலாக மிரட்டியது தெரியவந்தது. சிவகுருநாதன் மீது பெண்கள் வன்கொடுடை தடுப்பு சட்டம் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மோசடியில் ஈடுபட்ட அண்ணாநகரை சேர்ந்த சுனிதா பிரகாஷ் ( வயது 43 ) , திருவான்மியூரைச் சேர்ந்த சிவகுருநாதன் ( வயது 47 ) ஆகிய மூவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

கட்டி வைத்து அடித்து வீடியோவை " முகநூலில் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்

சென்னை கோடம்பாக்கத்தில் இறைச்சி கடை நடத்தி வருபவர் அப்சல் ( வயது 43 ) இவரது கடையில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது டெடர் ( வயது 22 ) பைஜன் ( வயது 19 ) சவுரவ், அஷ்ரப், ஜாவித் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களை கோடம்பாக்கத்தில் உள்ள வெள்ளாளர் தெருவில் உள்ள வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடையில் பணிபுரியும் ஜாவித் என்பவர் உரிமையாளர் அப்சலிடம் நம் கடையில் பணிபுரியும் சவுரவ் மற்றும் சிலர், அறையில் ஒரு வரை கட்டி வைத்து தாக்கி , அதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த அப்சல் சம்பவ இடத்திற்கு சென்று கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருந்த மற்றொரு இறைச்சி கடை ஊழியரான பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஜாவித் என்பவரை மீட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவரை கட்டி வைத்து தாக்கியோரில் , இருவரை பிடித்து வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், கடந்த பக்ரீத் பண்டிகையின் போது இவர்கள் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, முகமது ஜாவித் போதை தலைக்கேறி சவுரவை தரக்குறைவாக ஒருமையில் பேசியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தால் ஆத்திரமடைந்த சவுரவ் , பேச வேண்டும் என முகமது ஜாவித்தை வரவழைத்து , நண்பர்களுடன் சேர்ந்து கட்டி வைத்து இரும்பு பைப்பால் தாக்கியது தெரிய வந்தது. இதுதொடர்பாக முகமது டெடர், பைஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சவுரவ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Read Entire Article