Chennai Metro: மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்... இனி 3 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கம்

3 months ago 8
ARTICLE AD

ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் நீல வழித்தடத்தில் கூடுதல் சேவைகள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில்கள் இனி 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

நீல வழித்தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நீல வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மெட்ரோ இரயில் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் மெட்ரோ இரயில் நிலையங்களில் மெட்ரோ இரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும், வேகமான பயணத்தை வழங்குவதற்காகவும், கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகின்றன.

கூடுதலாக இயக்கப்படும் இந்த மெட்ரோ இரயில் சேவைகளின் மூலம் நீல வழித்தடத்தில் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை, நெரிசல் மிகுந்த நேரங்களில் (காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை) 6 நிமிட இடைவெளி மற்றும் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ இரயில்கள் இதன் பிறகு முற்றிலுமாக 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு உதவும் என்பதால் கூடுதலாக பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Read Entire Article