Chennai Airport : ’58 நாள் குழந்தைக்காக அவசரமாக தரையிறங்கிய விமானம்’ சென்னையில் நடந்தது என்ன..?

4 months ago 8
ARTICLE AD

கென்யாவில் இருந்து பறந்து வந்துகொண்டிருந்தது விமானம். சென்னையில் தரயிறங்க வேண்டிய நேரம் நேற்று காலை 8.15 மணி. ஆனால், அதற்கு முன்னராக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்கிறார் விமானி. கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு முன்னதாக விமானம் தரையிறங்க அனுமதி கேட்டதும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை பரபரப்புக்குள்ளாகிறது. என்ன காரணமாக இருக்கும் என பலரும் தங்களுக்குள் கேள்வியை எழுப்புகிறார்கள்.

காரணத்தை சொன்ன விமானி – அனுமதி கொடுத்த கட்டுப்பாட்டு அறை

நேரடியாக கென்ய விமானத்தின் விமானிகளிடம் விமானம் அரை மணி நேரத்திற்குக் முன்னதாக தரையிறக்க அனுமதி கேட்க என்ன காரணம் என கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு விமானகள் தரப்பில் இருந்து வந்த பதில், 58 நாளே ஆன பச்சிளம் குழந்தை மூச்சு, பேச்சு இல்லாமல் இருக்கிறது. அந்த குழந்தையை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்ற பதில் வொயர்லஸ் மூலமாக வந்துவிழுகிறது.

ஒரு உயிரை காக்க வேண்டிய அவசரம். அதுவும் 58 நாளே ஆன பச்சிளம் குழந்தையின் உயிர். இன்னும் கூடுதல் பரபரப்பு கட்டுப்பாடு அறையில் ஏற்படுகிறது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு பேசுகிறார்கல் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள். கென்ய விமானம் இறங்க அனுமதிக்க வேண்டிய இடத்தில் வேறு ஒரு விமான இறங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதையெல்லாம் சரிப்படுத்தி, விரைவாக விமானத்தை தரையிறக்க அதிகாரிகள் உடனடியாக உத்தரவிடுகிறார்கள்.

வழக்கத்தை விட கூடுதல் வேகத்தில் வந்த விமானம்

இதனையடுத்து கென்ய விமானம் தரையிறங்குவதற்கான அனுமதி தரப்பட்டதாக விமானிகளுக்கு தகவல் செல்கிறது. 58 நாட்களே ஆன குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் வழக்கத்தை விட கூடுதல் வேகத்தில் விமானத்தை சென்னை விமான நிலைய ஓடுபாதையை நோக்கி செலுத்துகிறார்கள் விமானிகள். ஓடுதளத்தை நோக்கி ஊழியர்களும், ஆம்புலன்ஸும் அதி விரைவாக வரவழைக்கப்படுகிறது.

23 நிமிடங்கள் முன்னதாக தரையிறக்கம்

சரியாக 8.15 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம். குழந்தையின் உயிரை காப்பதற்காக அனைவரின் ஒத்துழைப்பின்பேரில் 23 நிமிடங்கள் முன்னதாக அதாவது காலை 7.52 மணிக்கு ஓடுதளத்தில் தரையிறக்கப்படுகிறது.

குழந்தைக்கு என்ன ஆனது?

விமானம் தரையிறங்கியதும் அவசர சிகிச்சைக்குழு 58 நாட்களே ஆன மூச்சு பேச்சற்ற குழந்தையை பரிசோதிக்கிறது. உயிர்கொடுக்கும் அவசர சிகிச்சை விமானத்தில் வைத்தே செய்யப்படுகிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக குழந்தை ஏற்கனவே பறந்துகொண்டிருந்த விமானத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ குழு கலங்கியபடி அறிவிக்கிறது.

சோகமான விமானநிலையம்

விமானிகள், விமானத்தில் பயணித்தவர்கள், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் என அத்தனை பேரும் 58 நாட்களே ஆன குழந்தையை காப்பாற்ற விமானத்தை கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு முன்னர் போராடி, தரையிறக்கிய நிலையில், குழந்தையை காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து அத்தனை பேரும் கண்ணீரிலும் சோகத்திலும் ஆழ்ந்துப்போயினர். உயிரிழந்த குழந்தையின் உடல், உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு மருத்துவ கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கண்ணீர் தாய் தந்தையர்

எப்படியாவது இருதய அறுவை சிகிச்சை செய்து தன்னுடைய குழந்தையை பிழைக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், கென்யாவில் இருந்து சென்னை நோக்கி வந்த அந்த குழந்தையின் பெற்றோரின் நம்பிக்கை சுக்குநூறாக தகர்ந்துவிழுந்திருக்கிறது. குறைந்தபட்சம் மருத்துவமனை செல்லும் வரை உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தால் கூட மருத்துவர்களால் காப்பாற்றியிருக்க முடியுமோ? என்ற வேதனையில் அந்த கென்ய பெற்றோர் தவித்ததை பார்த்து விமான நிலையமே ஞாயிற்றுகிழமையான நேற்று சோகத்தில் ஆழ்ந்தது.

Read Entire Article