Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

1 year ago 7
ARTICLE AD

Chennai Air Show 2024 Tickets: சென்னையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள, போக்குவரத்து மாற்றங்களை அறிந்து பொதுமக்கள் பயணங்களை திட்டமிட காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

விமானப்படையின் சாகச நிகழ்ச்சி:

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி, சென்னையில் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. அதன்படி, இன்று மெரினா கடற்கரையில் ஒத்திகையும், நாளை பிரதான சாகச நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த பிரமாண்ட சாகச நிகழ்ச்சியை பொதுமக்களும் கண்டுகளிக்கலாம். அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சாகச நிகழ்ச்சியை காண, சுமார் 15 லட்சம் பேர் வரை நாளை மெரினா கடற்கரையில் கூடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்களை செய்து காவல்துறை அறிவித்துள்ளது.

போக்குவரத்து மாற்றங்கள்:

1. காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2. திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை,  காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல் பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை,  தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

3. அண்ணா சிலையிலிருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சமலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு. டபக்டர் டேசன் சாலை. ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

4. இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி RA புரம் 2வது பிரதான சாலை TTK சாலை RK சாலை அண்ணாசாலையை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

5. வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை. சாந்தோம் நெடுஞ்சாலை. ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் 0700 மணி முதல் 1600 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

வ.எண்

சாலைகளின் பெயர்

வாகனங்கள் நிறுத்துமிடம்

1.

காமராஜர் சாலை

கடற்கரை சாலை விஐபி &விவிஐபி பார்க்கிங்

பிரசிடன்சி கல்லூரி

சுவாமி சிவானந்தா சாலை

லேடி வெலிங்டன் கல்லூரி (நீல நிற பாஸ் மட்டும்)

2

சாந்தோம் சாலை

காது கேளாதவர் & வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி

செயிண்ட் பெட்ஸ் மேல்நிலைப்பள்ளி

புனித சந்தோம் பள்ளி’

செயிண்ட் பெட்ஸ் மைதானம்

கதீட்ரல் ஆரம்பப் பள்ளி

சமுதாய கூடம், சாந்தோம்

லூப் ரோட்

3.

ஆர்.கே. சாலை

MRTS - லைட் ஹவுஸ் சாலை

NKT பள்ளி (ஐஸ் ஹவுஸ் சந்திப்பு)

குயின் மேரிஸ் கல்லூரி

புனித எபாஸ் பள்ளி

4

வாலாஜா சாலை

கலைவாணர் அரங்கம்

ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு)

விக்டோரியா விடுதி மைதானம்

அண்ணாசாலை

தீவுதிடல் மைதானம்

PWD மைதானம் (செயலகம் எதிரில்)

மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை

எம்.ஆர்.டி.எஸ் சிந்தாதிரிப்பேட்டை

மேலே குறிப்பிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் காலை 09.30 மணிக்கு மூடப்படும். எனவே. தங்களது வாகனத்தில் நிகழ்ச்சியை பார்வையிட விரும்பும் பார்வையாளர்கள் கூடிய அளவு விரைந்து வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

1. ஏர் ஷோவை பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2. எதிர்பார்க்கப்படும் மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்களின் அடர்த்தி காரணமாக, 06.10.2024 அன்று சென்னை முழுவதும் சிரமமில்லாமல் பயணிக்க. MTC பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் MRTS ரயில்கள் போன்ற பொதுப். போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. MTC சிற்றூந்துகள் மூலம் அண்ணாசாலை மெட்ரோவில் இருந்து சிவானந்தா சாலையில் டிவி ஸ்டோன் வரையிலும், வாலாஜா ரோட்டில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரையிலும், ஆர் கே சலையில் வி.எம் தெரு சந்திப்பு வரையிலும் மாநகர பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article