CBSE Result 2025: வெளியானது தகவல்; சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? பார்ப்பது இப்படித்தான்!

7 months ago 7
ARTICLE AD

2025ஆம் ஆண்டுக்கான 10, பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆங்கிலப் பாடத்துடன் தொடங்கியது. காலை 10.30 முதல் 1.30 மணி வரை தேர்வு நடந்தது. அதேபோல, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்முனைவோருக்கான தாளுடன் முதல் தேர்வு தொடங்கியது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் மார்ச் 18ஆம் தேதி வரையும் நடைபெற்றன.

தேர்வு முடிவுகள் எப்போது?

பொதுவாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஒரே நேரத்தில் வெளியிடும். 2025ஆம் ஆண்டுக்கான 10, பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மே 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல https://results.cbse.nic.in/  என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

இணையத்தில் காண்பது எப்படி?

CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ போர்ட்டலான results.cbse.nic.in-க்குச் செல்லவும்

"CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025" அல்லது "CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025" என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் திரையில் காட்டப்படும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.

உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.

உங்கள் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கி சேமித்து, வைத்துக் கொள்ளலாம்.

மேலும் டிஜி லாக்கர் செயலி, குறுஞ்செய்தி ஆகியவை மூலமும் 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காண முடியும்.

கடந்த ஆண்டு எப்படி?

2024ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகின. அப்போது 12ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் 87.98 ஆகவும் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி வீதம் 93.6 ஆகவும் இருந்தன. அதேபோல 2023-ல் மே 12ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு:  cbse.gov.in

Read Entire Article