CBSE 10th, 12th Exam Result: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் எந்த தேதியில் எந்த நேரத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், கடந்த காலத்தில் வெளியானது போல் மே மாதத்தின் மத்தியில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு, பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 18ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. அதேபோல், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள், கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்தாண்டு, சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை 42 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

DigiLocker மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

cbse.digitallocker.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அல்லது டிஜிலாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதில், Digital Documents tab-ஐ கிளிக் செய்யவும்.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், CBSE 10 ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு மார்க் ஷீட்டுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிற உள்நுழைவு விவரங்களை பதிவிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

இதை எல்லாம் செய்வதற்கு முன்பு டிஜிலாக்கரில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

SMS மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

உங்கள் மொபைல் போனில் Message box-ஐ திறக்கவும்.

CBSE10 <Roll Number> <School Number> <Centre Number> என பதிவிடுவும்.

மேலே குறிப்பிடப்பட்டவற்றை அப்படியே டைப் செய்து, Roll Number, School Number, Centre Number ஆகிய விவரங்களை குறிப்படவும்.

அதனை, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

Roll Number மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

results.cbse.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

CBSE 10 ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

Roll number, school number, admit card ID, date of birth, and security pin உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடவும்.

முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 2024 ஆம் ஆண்டில், மொத்தம் 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதினர். அதில், 20 லட்சத்து 95 ஆயிரத்து 467 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டு, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்ச்சி விதிகம் 93.60 சதவீதம் ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டு, 12 ஆம் வகுப்பில், 16 லட்சத்து 21 ஆயிரத்து 224 மாணவர்கள் தேர்வெழுதினர். அதில், 14 லட்சத்து 26 ஆயிரத்து 420 பேர் தேர்ச்சி பெற்று 87.98 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.