CBSE 12th Result 2025: நாளை வெளியாகும் சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவு? டிஜிலாக்கர், மொபைல், இணையத்தில் காணலாம்- எப்படி?

7 months ago 5
ARTICLE AD

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை (மே 2) வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இந்த நிலையில், டிஜிலாக்கர், மொபைல், இணையதளம் ஆகியவற்றின் மூலம் இந்தத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.

நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்?

நாடு முழுவதும் பல்வேறு கல்வி வாரியங்கள் தங்களின் வாரியத்தின்கீழ் நடைபெற்ற 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி அன்று தொடங்கியது. ஏப்ரல் 4ஆம் தேதி முடிவு பெற்றது. நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், ஆயிரக்கணக்கிலான தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன.

தொடர்ந்து நாளை (மே 2) காலை 11 மணிக்கு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதை வாரியம் உறுதி செய்யவில்லை.

கடந்த ஆண்டு விவரங்கள்

கடந்த 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகின. அப்போது 12ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் 87.98 ஆகவும் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி வீதம் 93.6 ஆகவும் இருந்தது. அதேபோல 2023-ல் மே 12ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்த நிலையில் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

இணையதளத்தில் காண்பது எப்படி?

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல https://results.cbse.nic.in/  என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

குறுஞ்செய்தி மூலம் பார்ப்பது எப்படி?

பிளஸ் 2 மாணவர்கள், எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளைக் காணலாம். இதற்கு 7738299899 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பலாம். குறிப்பாக CBSE12 {roll number} {school number} {center number} என்று டைப் செய்து, 7738299899 என்ற எண்ணுக்கு செய்தி அனுப்பினா, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

டிஜி லாக்கர் (Digilocker) மூலம் காண்பது எப்படி?

டிஜிலாக்கர் இணையதளத்துக்குச் செல்லவும்.

பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் லாகின் செய்யவும்.

இப்போது ஆவணங்கள் பிரிவுக்குச் சென்று, உங்கள் CBSE 12வது மதிப்பெண் அட்டையை பிடிஎஃப் வடிவில் பெற்று, அதைப் பதிவிறக்கம் செய்யலாம்.

செயலி வழியாகவும் பார்க்கலாம் ( CBSE 12th Result 2025 Via App)

2025ஆம் ஆண்டுக்கான CBSE 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை செயலி மூலம் சரிபார்க்க, மாணவர்கள் Google Playstore-ல் இருந்து CBSE Class 12 result app என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதில், CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு லிங்க் என்னும் இணைப்பைக் கிளிக் செய்து, roll number, roll code ஆகியவற்றின் மூலம் லாகின் செய்யவும்.

CBSE 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண் அட்டையை PDF வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

தேவைப்படும்போது, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

Read Entire Article