CBSE 10th Result: மே 6 காலை 11 மணிக்கு 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்? சிபிஎஸ்இ சொன்னது என்ன?

7 months ago 9
ARTICLE AD

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று வெளியான செய்திக்கு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆங்கிலப் பாடத்துடன் தொடங்கி, காலை 10.30 முதல் 1.30 மணி வரை நடந்தது. இந்தத் தேர்வுகள் மார்ச் 18ஆம் தேதி வரை நடைபெற்றன. தொடர்ந்து தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

🚫 Fake News Alert 🚫
A letter dated 2nd May 2025 is being circulated on social media.

This letter is FAKE. It has not been issued by CBSE.

No official announcement has been made regarding the declaration of Class X/XII 2025 results.
📌 We urge students, parents, and… pic.twitter.com/Jg7pLF2qGl
— CBSE HQ (@cbseindia29) May 4, 2025

இதுகுறித்த பதிவில், 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.  மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிறர்,
✔️ சரிபார்க்கப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிருங்கள்
✔️ அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புங்கள் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

உண்மையான தகவலைப் பெற http://cbse.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து பாருங்கள் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Read Entire Article