ஸ்ருதி நாராயணன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். கடந்த சில நாட்களாக இவருடையது என்று சமூக வலைதளத்தில் நிர்வாண வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் இருப்பது ஸ்ருதி நாராயணன் என பலர் பதிவிட்டதால் வீடியோ வைரலாகி வருகிறது. சிலர் இந்த வீடியோ ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்கள். இன்னும் சிலர் இந்த வீடியோவில் இருப்பது அவர்தான் என்றும் திரைப்பட வாய்ப்பிற்காக அவர் ஸ்ருதி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டார் என சிலர் கருதினார்கள்

ஸ்ருதி நாராயணன் விளக்கம்

இது தொடர்பாக ஸ்ருதி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெளனம் கலைத்து பேசியுள்ளார். " இது மனித வாழ்க்கை. உங்கள் பொழுதுபோக்கு அல்ல. ரொம்ப கடினமான காலகட்டத்தில் இருக்கிறேன். நானும் ஒரு பெண்தான். எனக்கும் உணர்வுகள் உண்டு. அனைத்தையும் காட்டுத்தீ போல் பரப்பாதீர்கள். உங்கள் தாய், சகோதரி, காதலிக்கும் என்னை போன்ற உடல் உள்ளது. வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பார்த்து ரசியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு பதிவில் " இந்த மாதிரியான வீடியோக்கள் வெளியாகும் போது ஏன் அதை பார்ப்பவர்களையோ பகிர்பவர்களையோ விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஏ.ஐ வீடியோவாக இருந்தாலும் சரி நிஜமான வீடியோவாக இருந்தாலும் சரி அதனை பகிர்வது சட்டரீதியான குற்றமாகும். " என்று பதிவிட்டுள்ளார். இரண்டு பதிவிலும் அந்த வீடியோ ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டது என ஸ்ருதி நாராயணன் நேரடியாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஸ்ருதி நாராயணன்க்கு நடந்த அநீதியை ஏன் புறக்கனிக்கிறார்கள்

உண்மையோ பொய்யோ இந்த மொத்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர் ஸ்ருதி நாராயணன் ஒருவர் மட்டுமே...ஆனால் இதுபற்றி அவர் தவிர்த்து திரைத்துறை அல்லது சின்னத்திரையைச் சேர்ந்தவர்கள் கூட எதுவும் பேசாமல் மெளம் காப்பது சினிமாவில் Casting Couch தொடர்ச்சியாக நடந்து வருகிறதா என்கிற கேள்வியே எழுகிறது. ஒரு வேளை இந்த வீடியோ உண்மை என்றால் திரைத்துறையால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஸுருதி நாராயணன் ஒருவர்

சமீபத்தில் கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபோது பல நடிகைகள் தங்கள் எதிர்கொண்ட பாலிய தொல்லைகளை பற்றி பேசினார்கள். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெண்களுக்கு பாதுக்காப்பான சூழலே நிலவுகிறது என்பது பொதுப்படையான கருத்தாக சொல்லப்பட்டது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெண்களின் நிலை மேல் பல கேள்விகள் எழுகின்றன.