Budget 2025: தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு என்னென்ன திட்டங்கள்? பட்ஜெட் அறிவிப்பு விவரம்!

10 months ago 7
ARTICLE AD

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் தொழில்நுட்பம் சார்ந்த இடம்பெற்ற அறிவிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மத்திய பட்ஜெட் 2025-26:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த  பட்ஜெட் உரையில்  நடுத்தர மக்களை சந்தோஷப்படுத்தும் விதமாக, ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு இடம்பெற்றது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும், பிகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.

தொழில்நுட்பம் துறை சார்ந்த அறிப்புகள் என்ன?

5 தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் (National Centres of Excellence for Skilling) அதோடு ஏ.ஐ. தொழில்நுட்ப் மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஐஐடிக்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் இதன்மூலம் 6,500 மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50,000  Atal Thinking Laboratories (ATL) லேப்கள் உருவாக்கப்படும்.  Bharat Net திட்டத்தின் மூலம் மேல்நிலைப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு இணைய வசதி விரிவாக்கம் செய்யப்படும்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அரசு ஏற்கனவே வழங்கும் ரூ.10,000 கோடியுடன் கூடுதலாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும். முதன்முறையாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கும் 5 லட்சம் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்ற அறிவிப்புகள் பல முன்னெடுப்புகளுக்கு வழிவகுக்கும்.

ஒரு கோடி gig பணியாளர்களுக்கு  பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீடு வழங்குவது. இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் கிக் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

PM Swanidhi திட்டத்தின் கீழ் ரூ.30,000 வரம்பு கொண்ட யு.பி.ஐ. லிங்க்டு கிரெடிட் கார்டு, கடன் உச்ச வரம்பு அதிகரிப்பு.

ஐடி & தொலைதொடர்பு துறைக்கு பட்ஜெட்  ரூ.95,298 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தொழில்துறையினருக்கு மட்டுமல்லாமல் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு துறைக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதாக நிபுணர்கள் பட்ஜெட் பற்றி தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க..

Budget 2025: பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் புரிவோருக்கு நற்செய்தி...

Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?

New Income Tax Bill: புதிய வருமானவரி மசோதா... பில்ட் அப் கொடுக்கும் நிதியமைச்சர்... என்னவா இருக்கும்.?

Read Entire Article