Budget 2025 MSME: மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

10 months ago 7
ARTICLE AD

மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த வகையில் இருக்கும் என்பதை இங்கு காணலாம்.

பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க 1.57 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில், சிறு குறு நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் கடன் உத்தரவாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் பொம்பை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மத்திய பட்ஜெட் எப்படி என்பது குறித்து அந்தந்த தொழிலாளர்கள், நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் மிதுன் கூறுகையில், “இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க விஷயங்களும் இருக்கு. ஏமாற்றங்களுக்கான விஷயங்களும் இருக்கு. வரவேற்கத்தக்க விஷயங்கள் என்ன என்று பார்த்தால், சிறு, குறு தொழிகளுக்கு கடன் வரம்பை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு உயர்த்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டிருந்தோம். ரூ.20 கோடி வரை கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் ரூ.10 கோடி வரை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

சிறு குறு தொழில்களுக்கு கிரெடிட் கார்டு கொடுப்பதாக கூறியுள்ளனர். குழாய் மூலம் குடிநீர் அளிக்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028க்குள் எல்லாருக்கும் கொண்டு போய் சேர்ப்போம் என சொல்லியிருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் பைப் விற்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறைய தொழிலாளர்கள் அதன்மூலம் பயன்பெற முடியும்.

ஏமாற்றம் என்வென்று பார்த்தால், தொழில் இப்போது மந்த நிலையில் உள்ளது. இதனால் வட்டி 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் பண்ணித்தர வேண்டும் என கேட்டிருந்தோம். அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சிறு குறு தொழில்களுக்கு வட்டியில் மாணியம் கேட்டிருந்தோம். அப்போதுதான் மந்த நிலையில் இருந்து வெளியே வர முடியும். அதற்காக கேட்டிருந்தோம். அது வரல. மூலப்பொருள் வங்கி கேட்டிருந்தோம். அதுவும் வரவில்லை. எக்ஸ்போர்ட் க்ளசர் கேட்டிருந்தோம். அதுவும் வரல.

இதனால் ஏற்கெனவே இருக்கும் பாரத்தை மீண்டும் சுமக்கவே வழிவகுக்கிறது” எனத் தெரிவித்தார்.

Read Entire Article