Budget 2025 Expectations:உயிர் பூச்சிக்கொல்லிகள், உரங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு தேவை - விவசாயிகள் எதிர்பார்ப்பு!

10 months ago 7
ARTICLE AD

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் வாழ்வாதாரம் வேளாண்மையை நம்பி இருக்கிறது. பட்ஜெட் விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2025:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு ஜனவரி 31-ம் முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது ஆகிய நிகழ்வுகள். பிப்ரவரி, 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ம் தேதி வரை முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறும். அடுத்து மார்ச் 10ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதி முடிவடையும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக மக்களவையில் பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய இருக்கிறார்.

விவசாய துறையில் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், கிராமப்புற வருமானத்தை அதிகரிப்பதற்கும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

விவசாய உள்கட்டமைப்பு:

விவசாய உள்கட்டமைப்பு வசதிகள் பற்றி விரிவாக பேசுகிறார், ப்ராக்சிஸ் குளோபல் அலையன்ஸின் உணவு மற்றும் விவசாய பயிற்சித் தலைவர் அக்ஷத் குப்தா. அவர் கூறுகையில், ”விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் விளைப்பொருட்களை சேமிக்க குளிரூட்டப்பட்ட கிடங்குகளை அமைக்க, விநியோக மேலாண்மை ஆகியவறிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.1.52 லட்சம் கோடியை விட இந்த முறை அதிகமாக ஒதுக்கீடு செய்தால் நன்றாக இருக்கும். இந்த முதலீட்டு அறுவடை காலத்தில் ஏற்படும் இழப்பீடுகளை தவிர்க்க உதவும். வேளாண்மைக்கு வழங்கும் வங்கிக் கடன்களுக்கு 3.5 சதவீதமாக குறைக்க வேண்டும். இது விவசாயிகளின் நிதிச் சுமையை குறைக்கும்.” என்றார்.

வேளாண்மை ஸ்டார்ட்அப்களுக்கான நிதி உதவி:

பல்வான் கிரிஷியின் (Balwaan Krishi) இணை நிறுவனர் ரோஹித் பஜாஜ் தெரிவிக்கையில்,  இந்தியாவின் விவசாயத் துறை மற்றும் MSME உற்பத்தியாளர்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்தவும் இது ஒரு முக்கிய தருணம் என்பது தெளிவாகிறது. விவசாயம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 18 சதவீத பங்களிப்பையும், நமது பணியாளர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோரைப் பணியமர்த்துவதும் திறன் கொண்டதாக இருக்கிறது. எனினும். புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. ” என்று அவரது எதிர்பார்ப்பை தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. வரி விலக்கு:

IPL BIOLOGICALS நிறுவனர் ஹர்ஷ் வர்தன் தெரிவிக்கையில்,” வேளாண்மையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர, வளர்ச்சியை ஊக்குவிக்க பயோபூச்சிக்கொல்லி மற்றும் உர வகைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.” என்றார்.

Read Entire Article