Budget 2025 Education Sector: நாடு முழுவதும் 23 ஐஐடிக்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் இதன்மூலம் 6,500 மாணவர்கள் பயன்பெறுவர் எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளை, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்து, முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.

அதில் உயர் கல்வித்துறைக்கு அவர் அறிவித்துள்ள அறிவிப்புகள்.

’’நாடு முழுவதும் 23 ஐஐடிக்கள் விரிவாக்கம் செய்யப்படும். இதன்மூலம் 6,500 மாணவர்கள் பயன்பெறுவர்,

அடுத்த கல்வி ஆண்டில் புதிதாக 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் கூடுதலாக அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டில் 75 ஆயிரம் மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்’’.

இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.