BrahMos: பாகிஸ்தான் ப(தொ)டை நடுங்க வைத்த பிரமோஸ்! இந்தியாவின் அரணுக்கு இத்தனை சிறப்புகளா?

7 months ago 5
ARTICLE AD

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்து வரும் சண்டையால் இரண்டு நாட்டு மக்களும் மிகுந்த அச்சத்திலும், வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர். அதேசமயம், இந்தியா நமது நாட்டிற்கு எதிரான பயங்கரவாதத்தை அடியோடு வேரறுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து நடத்தி வருகிறது.

பிரமோஸ் எனும் பாகுபலி:

பாகிஸ்தானை காட்டிலும் பன்மடங்கு பலசாலியாக உள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத பலங்களில் பிரமோஸ் ஏவுகணை மிகவும் முக்கியமானது ஆகும். இந்த பிரமோஸ் ஏவுகணையானது இந்தியா - ரஷ்யாவின் கூட்டுத் தயாரிப்பு ஆகும்.

இது ரஷ்யாவின் பி - 800 ஆங்கிஸ் ஏவுகணையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரமோஸ் ஏவுகணையானது சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும். 2001ம் ஆண்டு முதல் இந்திய பாதுகாப்பில் ஒரு அங்கமாக பிரமோஸ் உள்ளது. 2001ம் ஆண்டு பிரமோஸ் ஏவுகணை சோதனை ஒடிசாவின் சண்டிபூர் கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இத்தனை சிறப்புகளா?

இந்த பிரமோஸ் ஏவுகணையின் சிறப்பம்சம் என்னவென்றால், இதை தரையில் இருந்தும், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தும், கப்பலில் இருந்தும், வானில் இருந்தும் எதிரி நாடுகள் மீது ஏவலாம் என்பதே ஆகும். இந்த பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் இந்தியா 50.5 சதவீத பங்களிப்பையும், ரஷ்யா 49.5 சதவீத பங்களிப்பையும் அளிப்பதாக ஒப்பந்தமிடப்பட்டு இந்த பணி தொடங்கப்பட்டது. பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் பங்களிப்பு அளப்பரியது ஆகும்.

ஒரே நேரத்தில் 3 இலக்குகள்:

தரையில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்தும்போது இது ஒரே நேரத்தில் 3 இலக்குகள் வரை தாக்கும் திறன் கொண்டது ஆகும். இந்திய ராணுவத்தில் நிலத்தில் இருந்து தாக்கும் திறன் கொண்ட பிரமோஸ் ஏவுகணை 2007ம் ஆண்டு முதல் அங்கம் வகிக்கிறது. இந்திய போர்க்கப்பல்களிலும் பிரமோஸ் தயாராக உள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 40 முதல் 50 மீட்டர் ஆழத்தில் இருந்தும் பிரமோஸ் ஏவுகணையை ஏவ இயலும். இந்த சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 2013ம் ஆண்டு வெற்றிகரமாக வங்கக்கடலில் ஏவி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

நீர்மூழ்கி, போர் விமானம்:

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இந்த பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்தும்போது 290 கி.மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையையும் பயன்படுத்தி அழிக்க முடியும். 2017ம் ஆண்டு இந்திய போர் விமானமான சுகோய்-30எம்கேஐ-யில் இருந்து பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்திய பாதுகாப்பின் முக்கிய அங்கமாக திகழும் பிரமோஸ் ஏவுகணையை முதன்முறையாக இந்தியா பாகிஸ்தான் மீது இன்று பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் உறுதி செய்துள்ளார். பிரமோஸ் ஏவுகணையானது 300 கி.மீட்டர் முதல் 800 கி.மீட்டர் வரை தொலைவு சென்று தாக்கும் வல்லமை கொண்டது.

பெயர் காரணம்:

இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா நதியில் உள்ள பிரம்மா என்ற வார்த்தையையும், ரஷ்யாவில் பாயும் மோஸ்கோவா என்ற நதியில் உள்ள மோஸ் என்ற வார்த்தையையும் இணைத்து பிரமோஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்றைய மதிப்பில் பிரமோஸ் ஏவுகணைகளின் தயாரிப்பிற்காக  2 ஆயிரத்து 135 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரமோஸ் ஏவுகணையின் சந்தை மதிப்பு இன்றைய நிலவரத்தில் 34 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

பல்வேறு திறன் கொண்ட அழிக்கும் அஸ்திரமான பிரமோஸ் ஏவுகணையை பார்த்து பாகிஸ்தான் அச்சம் கொண்டுள்ளது.

Read Entire Article