Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்

1 month ago 6
ARTICLE AD

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்  சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் பர்கி அணைக்கு அருகில் உள்ள நர்மதா ஆற்றில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து படகு பயணம் மேற்கொள்கின்றனர். இப்படியான நிலையில் நேற்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 40க்கும் மேற்பட்டோர் படகில் ஆற்றில் பயணித்தனர். அப்போது திடீரென வானிலை கடுமையாக மோசமடைந்தது. இதனால் பலத்த காற்று அடைத்ததால் படகு கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த அனைவரும் நீருக்குள் மூழ்க தொடங்கினர். அவர் லைஃப் ஜாக்கெட் போடாமல் இருந்தது, நீச்சல் தெரியாததால் ஏற்பட்ட பயம் காரணமாக அனைவரும் நீரில் பரிதவித்தனர். இதுவரை அந்த சுற்றுலா படகில் இருந்து 28 பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இன்னும் 6 பேரை தேடும் பணி நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவை இணைந்து படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த படகில் பயணித்த பல பயணிகள் அதனை இயக்கியவரிடம் நிலைமை மோசமாக இருப்பதால் திரும்பி செல்லுமாறு வலியுறுத்தியதாகவும், அதனை படகை இயக்கியவர் கேட்கவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் அபாயக் குரலைக் கேட்டு அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த  கட்டுமானத் தொழிலாளர்கள் முதலில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் கயிறு மூலம் நீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். நேற்று நான்கு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று காலை 5 உடல்கள் மீட்கப்பட்டது. இதனை மத்தியப் பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் தர்மேந்திர பாவ் சிங் லோதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பான உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி இந்தத் துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என அறிவித்தார்.

மீட்கப்பட்டவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உயிரிழந்தவர்களில் ஒரு தாயும் அவரது நான்கு வயது மகனும் அடங்குவர். இன்று காலை அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது. குழந்தையைக் காப்பாற்றும் தீவிர முயற்சியில் தாய் மகனை மார்போடு அணைத்தபடி மீட்கப்பட்டது பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. இதனைக் கண்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தர்மேந்திர பாவ் சிங் லோதி கண் கலங்கினார்.

இந்த விபத்தில் அங்கு வேலை பார்க்கும் தமிழ்நாட்டின் திருச்சி அண்ணாநகரைச் சேர்ந்த காமராஜ் என்பவரும் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அவரது உறவினர்கள் கோடை விடுமுறைக்காக அங்கு சென்றிருக்கும் நிலையில் படகு பயணம் மேற்கொண்டனர். படகு கவிழ்ந்த நிலையில் அதில் பயணம் செய்த காமராஜ், கார்குழலி, சௌபாக்கியம் ஆகியோருடன் தமிழ்வேந்தன், மயூரன் ஆகிய சிறுவர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article