BJP: பாஜக மு.மாநில தலைவர் விலகல்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

3 months ago 6
ARTICLE AD

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், அக்கட்சியில் இருந்து விலகினார். புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் ஊழல் நடப்பதாக சாமிநாதன் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், "புதுச்சேரியில் நேர்மையான ஆட்சி நடக்கவில்லை. தொண்டர்கள் மனதை பாஜக பிரதிபலிக்கவில்லை என்றும் புதுச்சேரி மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் விலகல்

புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், அக்கட்சியில் இருந்து விலகினார். புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் ஊழல் நடப்பதாக சாமிநாதன் குற்றம் சாட்டி உள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் இருந்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிக் கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் பாரதிய ஜனதா கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும்.

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன்

எனக்கு பதவி அளித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும், புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், ஊழலற்ற நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான பதிலும் இன்னும் வெளியாகவில்லை

சாமிநாதன் பாஜகவில், தொண்டர்களிடம் செல்வாக்கு மிக்க ஒருவராக கருதப்பட்டவர். அவரது இந்த முடிவு, மாநில பாஜகவில் உள்ள உள்ளடங்கிய அதிருப்திகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. இது கட்சியின் எதிர்கால செயல் திட்டங்களிலும், அதன் மேல் நிர்வாகத்தில் மாற்றங்களை உண்டாக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், பாஜக தரப்பில் இருந்து இதற்கு எந்தவிதமான பதிலும் இன்னும் வெளியாகவில்லை. சாமிநாதனின் இந்த விலகல், புதுச்சேரி அரசியலில் புதிய மாற்றங்களுக்கு முன்புற ஆவாய்க்கும் சாத்தியம் உள்ளது.

சமீப காலமாக புதுச்சேரி பாஜகவில் அதிருப்பதி நிலவி வருகிறது, மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது வேறு கட்சிக்கு தாவும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article