BJP Issue: பாஜகவினரை தரைக்குறைவாக பேசிய பாஜக துணைத்தலைவர் - கொதித்தெழுந்த முன்னாள் தலைவர்

1 year ago 7
ARTICLE AD

பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த வகையில் சேலம் மாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாஜக மாநில விவசாய அணி செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கலம் கலந்து கொண்டு 4000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சிக்கு பின்னர் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு மிக பிரம்மாண்டமாக நான்காயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.

இது பாஜக நிகழ்ச்சியா? அல்லது தனியார் நிகழ்ச்சியா? என்ற கேள்விக்கு, பாஜகவை சேர்ந்த ஒருவர் நடத்தும் நிகழ்ச்சி. பாஜக நிகழ்ச்சி தான் என பதிலளித்தார்.

தொடர்ந்து, பாஜக சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அது சில்லற தனமான விஷயம். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை. பாத்ரூம் போய் இருக்காரு. அப்படி விட்டு விடுங்கள் என்று மாநகர நிர்வாகிகளை தரைக்குறைவாக பேசினார். மேலும், 4000 பேர் பங்கேற்று உள்ள நிகழ்ச்சியில் வெறும் 4 பேரை பற்றி பேச வேண்டாம். பிஜேபியின் யார் மக்கள் பணியாற்ற வந்திருப்பவர்களை உயர்த்துவது தான் பாரதிய ஜனதா கட்சி. அதுதான் பிரதமர் விரும்புகிறார். அவர்களாக முன்வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். இல்லாதவர்கள் போய்விடுங்கள் என்று பேசினார்.

பாஜகவின் மாநில துணைத்தலைவரின் இந்த பேச்சு சேலம் மாநகர நிர்வாகிகளிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கே.பி.ராமலிங்கத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாவட்டம் முன்னாள் தலைவர் கன்னங்குறிச்சி மோகன் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கே.பி.ராமலிங்கம் நான்கு கட்சிகள் மாறி பாஜகவிற்கு வந்த பிறகும் அவரது குணாதிசயங்களை மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை. மாநகர நிர்வாகிகள் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, அவர்கள் சில்லற தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று பேசி உள்ளார்.

https://www.facebook.com/share/v/nV4KjDWtfkNUmnuX/?mibextid=oGgwdE

அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதாவை, எம்ஜிஆர் மறைவின்போது அவரை காலால் எட்டி உதைத்த குணாதிசயம் போனதாக தெரியவில்லை. நீ பாஜகவிற்கு பொழப்பு நடத்த வந்திருக்கிறாய். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயக கட்சியாக பாஜக உள்ளதா? அண்ணாமலை இல்லாததால் ராமலிங்கம் ஆட்டம் ஆடுகிறார். தவறான கொள்கைக்குச் சென்ற கே.பி.ராமலிங்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன். சில்லற தனம் என்று கூறியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் எந்த நிகழ்ச்சிக்கு சேலம் வந்தாலும் வன்மையாக கண்டித்து கருப்பு கொடி காட்டுவேன் என்றார்.

இரண்டு நாட்கள் ஆகியும் இதுவரை அவர் மீது மாநில பாஜக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில நிர்வாகிகளுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நடப்பது சேலம் மாநகருக்கு கேவலம். உயிர் கொடுத்த உத்தமர் இருந்த ஊர் சேலம். அவருக்கு பக்கபலமாக இருந்து பலவற்றை இழந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை சில்லறையாக தெரிகிறதா? பிரதமர் சேலம் வந்த நிகழ்ச்சியின் போது வசூல் செய்த பணத்தை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டு ராமலிங்கத்தின் மீது உள்ளது. மீண்டும் இந்த கட்சியில் தொடர வேண்டும் என்றால் பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வாருங்கள். இங்கிருப்பவர்களை தூர்வாரும் வேலை வேண்டும். இந்த சம்பவத்தை கேட்டது முதல் என் மனது கொந்தளித்து விட்டது. கட்சிக்கு வெளியே இருந்து வருபவர்களுக்கு பதவி கொடுத்தால் இதுதான் நிலை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. பிற கட்சியிலிருந்து வந்திருந்தாலும் மாநிலத் துணைத் தலைவர் என்ற முறையில் அனைத்து மரியாதையும் செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறினார்.

Read Entire Article