<p>பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் முதல் வாரத்திலேயே பல்வேறு சர்ச்சைகளுடன் பரபரப்பாக தொடங்கியுள்ளது. முதல் வார எவிக்‌ஷனுக்கு முன்பே நந்திதி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் முதல் வார எமிக்‌ஷனின் இயக்குநர் பிரவீன் காந்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்</p>
<h2>பிரவின் காந்தி வெளியேறினார்</h2>
<p>பிக்பாஸ் வார இறுதி எபிசோட்டுக்கான படப்பிடிப்பு இன்று நடைபெற்று வருகிறது. முதல் வார எவிக்‌ஷனில் யார் வெளியேறப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. இப்படியான நிலையில் நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து அவராகவே வெளியேறினார். முந்தைய சீசன்களில் முதல் வாரம் என்பதால் எவிக்‌ஷன் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது நந்தினியும் வெளியேறி இருப்பதால் முதல் வாரம் எவிக்‌ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சீசன் எதிர்பார்க்காத அடுத்தடுத்து புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் நந்தினியைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக இயக்குநர் பிரவீன் காந்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். எலிமினேஷன் பட்டியலில் வாட்டர்மெலஸ் ஸ்டார் திவாகர் உள்ளிட்ட சிலர் மற்ற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டார்கள். அதிக நபரால் நாமினேட் செய்யப்பட்டதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரவீன் காந்தி வெளியேற்றபட்டார். இந்த எபிசோட் நாளை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கலாம் </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/does-drinking-alcohol-increases-hunger-235974" width="631" height="381" scrolling="no"></iframe></p>