பிக்பாஸ் 9 தமிழ்

பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் இன்று முதல் துவங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி இரண்டாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அடுத்தடுத்த போட்டியாளர்கள் அறிமுகப் படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வருகிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பிரபலமான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். யார் இந்த வாட்டர்மெலண் ஸ்டார் ? இவரது தனித்திறமை என்ன ? இவர் சிக்கிய சர்ச்சைகள் குறித்து இங்கு பார்க்கலாம் .

யார் இந்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்

திரைப்பட காட்சிகளை நடித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வந்தவர் திவாகர். மதுரையைச் சேர்ந்த இவர் ஒரு பிசியோதெரபிஸ்ட் மருத்துவரும் கூட. 3 படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி மற்றும் கஜினி படத்தில் சூர்யா நடித்த வாட்டர்மெலன் காட்சியை நடித்துகாட்டி இவர் வெளியிட்ட வீடியோக்கள் பெரியளவில் வைரலாகின . இதனைத் தொடர்ந்து அனைத்து யூடியூப் சேனல்களும் இவரை அழைத்து வீடியோ வெளியிட்டு பிரபலமாக்கின. சூர்யா , தனுஷை விட தான் ஒரு பெரிய நடிகன் என்று நம்பத் தொடங்கிய திவாகர் தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்கிற பட்டத்தையும் கொடுத்துக் கொண்டார். இன்ஸ்டாகிராம் தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தில் நடித்திருந்தார்.

திறமைகள்

தன்னை எவ்வளவு தான் மக்கள் கேலி செய்தாலும் அதை எல்லாம் பாசிட்டிவாக மாற்றி தான் ஒரு நடிப்பு அரக்கண் என தன்னையே நம்ப வைத்திருப்பது தான் இவரது தனித்திறமை.

சர்ச்சைகள்

பல முன்னணி நடிகர்களைப் பற்றி பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். நடிகர் சூரியுடன் தன்னை ஒப்பிட்டு ஒருமுறை இவர் பேசியது பரவலாக சர்ச்சையை ஏற்படுத்தியது. “சூரிக்கு படிப்பு இல்லை அதனால் அவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார் ஆனால் நான் நிறைய படித்திருக்கிறேன் அதனால் சின்ன ரோல்களில் நடிக்க மாட்டேன்” என கூறி இருந்தார். அதேபோல் நடிகர் சாந்தனுவை தாக்கி இவர் வெளியிட்ட வீடியோவுக்கு பரவலாக எதிர்ப்புகளை சந்தித்தார். நடிகர் சாந்தனுவுக்கு படம் ஓடவில்லை அதனால் அவர் தன்னைப் பார்த்து பொறாமை படுவதாக அந்த வீடியோவில் திவாகர் பேசியிருந்தார்.

வெளியில் பார்க்க காமெடியாக தெரிந்தாலும் தூத்துக்குடி கவின் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் தனது சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவாக திவாகர் பேசியிருந்ததும் குறிப்பிடத் தக்கது .