பிக்பாஸ் தமிழ் 8

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை ஒளிபரப்பான 7 சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் சிரிப்பு , சோகம் , பகை , அன்பு என எல்லா விதமான எமோஷன்களையும் வெளிக்காட்டி இருக்கிறார்கள். இந்த ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்களிடம் உற்சாகம் குறைந்தது. எல்லா விதமான போட்டியாளரையும் கையாள கமலை தவிர இன்னொருத்தர் யார் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில் தான் விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. கமல் தான் வேண்டும் என்று சொன்ன ரசிகர்கள் இவர்னா எங்களுக்கு ஒக்கே என்றனர்.

#GrandLaunch of Bigg Boss Tamil Season 8 - அக்டோபர் 6 முதல் மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. 😎
உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.. ❤️‍🔥 ஏன்னா, இந்த வாட்டி "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." 🔥 #VJStheBBhost @VijaySethuOffl 😍 pic.twitter.com/Cq71wCJfHN

— Vijay Television (@vijaytelevision) September 24, 2024

அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 8 வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்க இருப்பதாக விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.