பெங்களூருவில் உள்ள யெலஹங்கா துணை மின்நிலைய பகுதியில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பிப்ரவரி 21 ஆம் தேதி சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.

இதன்படி பெங்களூரு, தாலுகாக்கள் மற்றும் நகர் பகுதிகளில் 10 மணி முதல் 6 மணி வரையிலும், மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பராமரிப்புப் பணி காரணமாகவே இந்த மின் தடை என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது. பொது மக்கள், தேவையான சமாளிப்புகளை மேற்கொண்டு ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் மின் தடை?

21.02.2026 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் அவ்வப்போது மின் விநியோகம் தடைபடும் என்று BESCOMஅறிக்கையில் தெரிவித்துள்ளது.

யெலஹங்கா துணை மின்நிலைய பகுதி

கேஎம்எஃப், ஒய்என்கே நியூ டவுன் 208, 407, 'பி' செக்டார், சிபி சாண்ட்ரா, அல்லாலசந்திரா, சாரதாநகர், பாப்புலர், அன்ரியா, மாருதி நகர், கோகிலு, பிபி ரோடு யெலஹங்கா, பாகலூர் கிராஸ், வெங்கடால், நிட்டே கல்லூரி, பிஎஸ்எஃப், ஐஏஎஃப், இன்டர்நேஷனல் ஸ்கூல், ககென் அட்ஜுன்னாக்ட், டிகா நகர் அட்ஜுன்னாக் கல்லூரி. பூர்வாங்கரா ஆர்.எம்.இசட் கேலரியா, ஆத்தூர் லேஅவுட் 1வது குறுக்கு சாலை, எஸ்கார்ட்ஸ் லேஅவுட், தொட்ட பெட்டஹள்ளி, திப்பு வட்டம், சிக்கபெட்டஹள்ளி, காவேரி லேஅவுட், கிரிதம்நகர், ஏஎம்எஸ் லேஅவுட், டீச்சர், பெல்யா.6 பிளாக், HMT 3வது பிளாக், HMT 4வது பிளாக், HMT 6வது பிளாக் மற்றும் சுற்றியுள்ள பகுதி.

பொதுமக்கள் கவனத்திற்கு:

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம்.

மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும்.

மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைப் பயன்படுத்த வேண்டும்.

பெங்களூரு மாநிலத்தைப் பொறுத்தவரை, திட்டமிடப்பட்ட மின் தடை குறித்த கூடுதல் தகவல்கள் அல்லது லேட்டஸ்ட் விவரங்களை, http://bescom.karnataka.gov.in என்ற இணைய முகவரி மூலம் பெறலாம். அதேபோல 1912 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்தும் மின் தடை பெறலாம்.

பெஸ்காம் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன்

* பெங்களூரு நகர தெற்கு வட்டம்: 8277884011
* மேற்கு வட்டம்: 8277884012
* கிழக்கு வட்டம் 8277884013
* வடக்கு வட்டம் 8277884014