Beaches Of South India: மெரினா பீச்ச விடுங்க..! தென்னிந்தியாவின் இந்த அழகான 5 கடற்கரைகள் பற்றி தெரியுமா?

1 year ago 7
ARTICLE AD

Beaches Of South India: தென்னிந்தியாவில் உள்ள மிக அழகான 5 கடற்கரைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

எழில் கொஞ்சும் தென்னிந்திய கடற்கரைகள்:

இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவை ஒட்டிய தென்னிந்தியாவின் அற்புதமான கடற்கரைகள், ஸ்கூபா டைவிங், வாட்டர் ஸ்கீயிங் மற்றும் நீச்சல் போன்ற சாகச மற்றும் அற்புதமான நீர் விளையாட்டுகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. கடற்கரையில் அலைகள் மோதும் சத்தம், தெளிவான நீல வானம் மற்றும் கடல் உணவுகளின் விதவிதமான சுவைகள்  ஆகியவற்றுடன், இந்த கடற்கரைகள் ஓய்வெடுக்கவும் இயற்கையை ரசிக்கவும் சிறந்ததாக விளங்குகின்றன. குறிப்பாக, மெரினாவை தாண்டி தென்னிந்தியாவில் பல பிரபலமான கடற்கரைகள் உள்ளன.

இந்தியாவின் மிக அழகான கடற்கரைகளின் பட்டியல்:

ஆலப்புழா கடற்கரை, கேரளா:

ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலப்புழா கடற்கரை அமைதியான சூழலையும் இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் கொண்டுள்ளது. இது வரிசையாக நீண்டு வளர்ந்துள்ள பனை மரங்கள், பல ஏரிகள் மற்றும் குளங்கள் மூலம் சூழப்பட்டு உள்ளது. அங்கு படகு பந்தயம், படகு சவாரி மற்றும் சர்ஃபிங், பாராசைலிங் மற்றும் நீச்சல் போன்ற நீர் விளையாட்டுகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.

(Image source: Twitter/ Gokerala_)

கோவளம் கடற்கரை, கேரளா:

(Image source: Twitter/ KeralaTourism)

கோவளம் கடற்கரை மலபார் கடற்கரையில் நிழல் தரும் தென்னை மரங்கள் மற்றும் அமைதியான சுற்றுப்புறங்களுடன் ஒரு அழகான கடற்கரையாக உள்ளது. அரபிக் கடல் மற்றும் வெள்ளை மணல் கடற்கரைகளில் இருந்து வரும், நீல நீரின் கலவையானது ஆண்டு முழுவதும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. அவர்கள் இங்கு நீச்சல் மற்றும் சூரிய குளியலை அனுபவிக்கிறார்கள்.

மகாபலிபுரம் கடற்கரை, தமிழ்நாடு:

(Image source: Twitter/ desi_thug1)

சென்னை கடற்கரையில் அமைந்துள்ள மகாபலிபுரம் கடற்கரையானது, பார்வையாளர்களுக்கு அமைதியையும், நிம்மதியையும் தரக்கூடிய மணல் கரைகளைக் கொண்டுள்ளது. கடற்கரையானது, அங்கு அமைந்துள்ள பாறைகளில் வெட்டப்பட்ட சிற்பங்களுக்கு பிரபலமானது மற்றும் சூரிய குளியல் மற்றும் ஓய்வெடுப்பதற்கும் மிகவும் சிறந்த இடமாக திகழ்கிறது.

ஓம் கடற்கரை, கர்நாடகா:

(Image source: Twitter/ Ananth_IRAS)

கடற்கரை அதன் தனித்துவமான வடிவம் காரணமாக இந்து சின்னமான 'ஓம்' என்பதிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. அதன் அழகிய காட்சிகள், சிறிய குகைகள் மற்றும் சர்ஃபிங், வாட்டர் ஸ்கீயிங், பாராசைலிங் மற்றும் வாழைப்பழ படகு சவாரி போன்ற நீர் விளையாட்டுகளுடன், சுற்றுலா பயணிகள் தவற விடக்கூடாத கடற்கரைகளில் இதுவும் ஒன்றாகும்.

மால்பே கடற்கரை, கர்நாடகா:

(Image source: Twitter/ VarierSangitha)

உடுப்பியில் உள்ள மால்பே கடற்கரை, தங்கம், பழுப்பு நிற மணல் மற்றும் நீல நீரைக் கொண்ட இயற்கையான துறைமுகத்தை வழங்குகிறது. பனை மரங்கள் நிறைந்த கடற்கரைகள் மற்றும் அருகிலுள்ள தீவுகளுடன், கடற்கரை செல்பவர்கள் மத்தியில் மகிழ்ச்சிகரமான இடமாக மாறியுள்ளது. பார்வையாளர்கள் இயற்கை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் இயற்கை அழகு வழங்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்.

Read Entire Article