தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் அயலி. புதியதாக ஒளிபரப்பபடும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜமுனா அயலிக்கு ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரை மாப்பிள்ளையாக கொண்டு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தற்கொலை மிரட்டல் விடுத்த பாட்டி:

அதாவது ஜமுனா இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கலனா செத்துப் போயிடுவேன் என்று அயலியை மிரட்டுகிறாள். பாட்டி வேண்டாம் இங்கிருந்து போயிடு என்று சொல்ல அயலி இல்ல சித்தி சொல்றத கேட்கப் போறேன் என்று ஷாக் கொடுக்கிறாள்.

பாட்டி அப்படின்னா நான் போயிடுவேன்.. ஒரேடியா உயிரை விட்டுடுவேன் என்று பதில் கொடுக்க அயலி அதிர்ச்சி அடைகிறாள். சிவா அங்கு வந்து என்னாச்சு என்று கேட்க அயலி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லப் போறேன் என்று சொல்கிறாள்.

15 பெண்களை தேடிச் செல்லும் அயலி:

இந்த சமயத்தில் உயர் அதிகாரி ராஜேஷ் போன் செய்து ஒரு டாஸ்க் கொடுக்க இப்போது முடியாது என்று சொல்ல, 15 பொண்ணுங்கள கடத்திட்டாங்க.. அதுவும் அந்த வர்மா பண்ண வேலைதான் என்று சொல்ல அயலி அந்த 15 பெண்களும் பாதுகாப்பாக திரும்பி வருவாங்க.. அதுக்கு நான் கேரண்டி என்று சொல்லி கிளம்புகிறாள்.

இன்னொரு பக்கம் வர்மா 15 பொண்ணுங்களையும் பத்திரமா பாத்துக்கோங்கடா என்று தனது அடியாட்களிடம் சொல்கிறான். இந்த நிலையில் அயலி அங்கு வந்து இறங்குகிறாள். வீட்டில் ஜமுனா அயலி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.