Ayali Serial:தலைகால் தெரியாமல் குதிக்கும் ஜமுனா.. கபலினை அடித்து துவைத்த அயலி.. அயலி சீரியலில் இன்று

6 months ago 5
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் இந்திராணி ஜமுனாவுக்கு போன் போட்டு பொண்ணு கேட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது யோசித்துப் பார்க்கலாம் வாங்க.

தலைகால் தெரியாமல் குதித்த ஜமுனா:

இந்திராணியிடம் இருந்து வந்த போன் காலால் ஜமுனா தலைகால் தெரியாமல் சந்தோஷத்தில் இருக்கிறாள். அயலி மற்றும் அவளது அம்மா குறித்த எல்லா விஷயத்தையும் மறைத்து ரித்திரிகாவுக்கு கல்யாணம் செய்ய முடிவு எடுக்கிறாள்.

இதைத் தொடர்ந்து கபிலன் வீட்டில் உட்கார்ந்து போன் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு வர்மா மேடம் இருந்து போன் வருகிறது. கபிலன் போனை எடுக்க, வர்மா நீ என் அடிமை டா என்று பேசிக்கொண்டு இருக்க, அப்போது இந்திராணி அங்கு வந்து விட கபிலன் போனை கட் செய்து விடுகிறான். இதனால் வர்மா கோபம் அடைகிறான்.

அடுத்ததாக இங்கே வீட்டில் ரித்விகா ரெடியாகிக் கொண்டிருக்க அங்கு வந்த ஜமுனா உனக்கு நல்ல வாழ்க்கை அமைய போகுது என்று இந்திராணியிடம் இருந்து வந்த போன் கால் குறித்து சொல்ல அவளும் சந்தோசம் அடைகிறார். செல்லம் பணத்தை கொடுத்து போய் பியூட்டி பார்லர்ல பேசியல் பண்ணிட்டு வா, பெரிய ஆள் ஆனதும் என்னை மறந்துடாத என்று சொல்கிறாள்.

கபிலனை அடித்து துவைக்கும் அயலி:

அடுத்ததாக சிவா மற்றும் அயலி பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்கூலில் நடக்கும் ஒரு பங்க்ஷன் குறித்து பேச சிவா, நடந்தது மறந்துட்டியா என்று கேட்கிறான். இதே ஸ்கூலில் கபிலன் பிராங்க் என்ற பெயரில் ஒரு பெண்ணை அபூஸ் செய்ய முயற்சி செய்ய அயலி ஹாக்கி ஸ்டிக் எடுத்து அவனை அடித்து வெளுத்து துரத்தி விட்ட விஷயம் ஃபிளாஷ்பேக்கில் வந்து செல்கிறது.

இந்திராணி வீட்டில் தனது அண்ணனிடம் பொண்ணு வீட்டுக்காரை ஹோட்டலுக்கு வர சொல்லி இருக்கேன் என்று சொல்கிறாள். அவர் இவ்வளவு பெரிய வீடு இருக்கும்போது எதுக்கு ஹோட்டல்? என்று கேட்க அவங்க மனசு கஷ்டப்படக்கூடாது என்பதற்காக ஹோட்டலில் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறாள். உதய பெருமாள் எது பண்ணாலும் சரியாக இருக்கும் என்று சொல்லுகிறார்.

ஜமுனா தற்கொலை மிரட்டல்:

அதைத் தொடர்ந்து தேவராஜ் வீட்டில் சாப்பிட வந்து உட்கார ஜமுனா கொண்டு வந்து கொடுக்கிறாள். சாப்பிடற நேரத்துல டீ எதுக்கு என்று கேட்க அதான் ஹோட்டலுக்கு சாப்பிட போறோம்ல என்று சொல்கிறாள். பிறகு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க என்று சொல்ல, தேவராஜ் அயலி கிட்ட சொல்லிட்டியா என்று கேட்கிறார். ஜமுனா என் பொண்ணு தான் எனக்கு மூத்த பொண்ணு.. அந்த அர்ச்சனாவால என் வாழ்க்கை போனா மாதிரி இந்த அயலியால் என் பொண்ணோட வாழ்க்கைய போக விடமாட்டேன். நீங்க என் கூட வந்து தான் ஆகணும் இல்லனா தற்கொலை பண்ணிக்கொள்வேன் என்று மிரட்டுகிறாள்.

இதனால் வேறு வழியில்லாமல் தேவராஜ் அவர்களுடன் கிளம்பிச் செல்ல எல்லோரும் ஒன்றாக வெளியே வந்ததும் பாட்டி நில்லுங்க என்று தடுத்து நிறுத்தி என்ன மாப்பிள்ளை பார்க்கவா போறீங்க என்று கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article