Ayali Serial: அயலியை சித்ரவதை செய்யும் ரித்விகா.. ஜமுனாவை மிரட்டும் பாட்டி - அயலி சீரியலில் இன்று

6 months ago 5
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அயலி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரித்விகாவுக்கும் கபிலனுக்கும் திருமணம் பேசி முடித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ரவுடிகளுடன் சண்டையிட்ட அயலி:

அதாவது, பாட்டி கோபத்தில் இருக்க அயலி நான் சித்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறந்துடீங்களா என்று கேட்கிறாள். பிளாஷ்கட் ஓப்பனாக எல்லாரும் குடும்பத்துடன் வேனில் கோவிலுக்கு செல்ல திருடர்கள் உள்ளே புகுந்து நகைகளை கழட்டி தர சொல்லி பிரச்சனை செய்கின்றனர்.

அயலி துணிச்சலாக ரவுடிகளுடன் சண்டை போடும் போது எதிர்பாராத விதமாக கத்தி ரிதிவிக்காவின் கழுத்தில் பட அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகின்றனர். அயலி துணிச்சலாக சண்டையிட்டு ரவுடிகளை ஓட விட அவளை ஊரே பாராட்டுகிறது.

தாலியை கழட்டி வீசிய ஜமுனா:

அடுத்து டாக்டர் ரிதிவிகாவுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல என்று சொல்ல அயலி அங்கு வர ஜமுனா எங்கடி வந்த? என் பொண்ணை கொல்ல பார்த்த என்று சத்தம் போடுகிறாள். இனிமே இவ இந்த வீட்டில் இருக்க கூடாது, இவ இருந்தா நான் இருக்க மாட்டேன் என்று தாலியை கழட்டி போட்டு வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுக்கிறாள் ஜமுனா.

அயலி காலில் விழுந்து கெஞ்ச ஜமுனா நான் சொல்றதை கேட்கணும், என் பேச்சை மீற கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டு முடிவை மாற்றி கொள்கிறாள். இதையடுத்து பிளாஷ்பேக் முடிவடைய கல்யாணம் பேசி முடித்து விட்டு வீட்டிற்கு வர பாட்டி அவர்களிடம் அயலி இருக்கும் போது இளைய பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ணலாம் என்று சத்தம் போடுகிறாள்.

அயலியை துணிதுவைக்க வைக்கும் ரித்விகா:

ஜமுனா கொலைகாரி பொண்ணுக்கு யார் மாப்பிள்ளையா வருவா? என்று அவமானப்படுத்தி பேச பாட்டி அப்படினா மாப்பிள்ளை வீட்டு காரரை பார்த்து அயலி தான் மூத்தவள் என்ற உண்மையை சொல்றேன் என்று ஷாக் கொடுக்க ஜமுனா அயலிக்கு நானே கல்யாணம் பண்ணி வைக்குறேன் என்று வாக்கு கொடுக்கிறாள்.

அடுத்து ரித்விகா வாஷிங் மெஷின் ஒயரை அறுத்து விட்டு துணிகளை எடுத்து வந்து கொடுத்து அயலியை கையால் துவைக்க வைக்கிறாள். செல்லம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வர அவளும் தன்னுடைய பங்குக்கு துணிகளை எடுத்து வந்து கொடுத்து துவைக்க சொல்கிறாள்.

இந்த சமயத்தில் சிவா போன் செய்து ஒரு அக்யூஸ்ட்டை துரத்திட்டு போயிட்டு இருக்கேன், நீ வா என்று சொல்ல அயலி சுவர் ஏறி குதித்து ஓடுகிறாள். இதை செல்லம்மா பார்த்து விடுவாளா? அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article