Ayali Parijatham Sangamam: அயலியை பாராட்டிய இசை,விஷால்.. அயலி பாரிஜாதம் இன்று மகா சங்கமம்!

4 months ago 17
ARTICLE AD

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்கள் அயலி மற்றும் பாரிஜாதம். இந்த இரண்டு சீரியல்களின் மகாசங்கமம் எபிசோட் இன்று ஒளிபரப்பாகிறது. அதில் என்ன வருகிறது? என்பதை கீழே காணலாம்.

அயலியை பாராட்டிய விஷால் இசை:

அதாவது வர்ஷினி மீது தான் சந்தேகமாக இருப்பதாக சொல்ல, வர்ஷினி நான் நகையை எடுக்கல என்று உறுதியாக சொல்கிறாள். பிறகு அயலி நகை காணாமல் போன இடத்தில் ஒரு கவரில் மல்லி பூ இருப்பதை கவனிக்கிறாள். அதன் பிறகு சிசிடிவி காட்சிகளை வைத்து, இங்கே மல்லி பூ வைத்தது யார்? என்பதை கண்டுபிடித்து விசாரிக்க நகையை எடுத்தது அந்த பெண்மணிதான் என்பது தெரிய வருகிறது.

பிறகு விஷால் மற்றும் இசை என இருவரும் அயலியை பாராட்டுகின்றனர். பிறகு விஷால் மற்றும் இசை இருவரும் மேடைக்கு வந்து அவர்கள் இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.

இந்திராணியைத் தாங்கிப்பிடித்த செழியன்:

அனைத்து ஜோடிகளையும் ஒன்று சேர்ப்பதற்காக தரையில் எண்ணெய் கொட்ட, இந்திராணி வழுக்கி விழ போக செழியன் தாங்கி பிடிக்கிறான்.

அடுத்து விஷால் விழப் போக இசை அவனை பிடித்து விடுகிறாள். ஆனால் அயலி விழாமல் போனதால் சிவா அவளை தாங்கி பிடிக்க முடியாமல் வருத்தப்படுகிறான்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மற்றும் பாரிஜாதம் சீரியல்களின் மகா சங்கமத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article