Auroville : ஆரோவில்லில் வனவிலங்கு கல்வி பூங்கா திறப்பு.. இதை தெரிஞ்சுகோங்க..

1 year ago 7
ARTICLE AD

புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொரட்டாண்டி சுங்கசாவடியில் இருந்து 600 மீட்டர் தொலைவில் 'லீ பாரடைஸ் டி ஆரோ' வனவிலங்கு கல்வி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில், ஆரோவில் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரோவிலில் வனவிலங்கு கல்வி பூங்கா திறப்பு

ஆரோவில்லைச் சேர்ந்த கீதா செல்வம், சக்கரபாணி, அருண்செல்வம் ஆகியோர், பூங்கா ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். இங்கு 25 பசுமாடுகள், கன்று குட்டிகள், முயல்கள், வாத்துகள், மீன்கள் மற்றும் பஜ்ஜிஸ், ஆப்ரிக்கன் லவ் பேர்ட்ஸ், காக் டைல்ஸ் உள்ளிட்ட 6 வகையான 210 வெளிநாட்டு கிளிகள் இருப்பிடமாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த வனவிலங்கு கல்வி பூங்கா திறப்பு விழா நடந்தது. விழாவில் ஆரோவில் அறக்கட்டளை இயக்குனர் சொர்ணாம்பிகா திறந்து வைத்து பேசினார். பூங்காவை பார்வையிட ஒரு நபருக்கு ரூ.150 கட்டணம். தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.

28.02.1968 அன்று வருங்கால நகரமான ஆரோவில்லின் தொடக்க விழாவில், நகரத்தின் மையப் பகுதியான ஆலமரத்தின் அருகே, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் 121 நாடுகளின் பிரதிநிதிகள் சுமார் 5,000 பேர் கூடியிருந்தனர். இப்பிரதிநிதிகள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து கொண்டுவந்த மண்ணை, ஆம்பித்தியேட்டரில் வைக்கப்பட்ட, சலவைக் கல்லால் ஆன தாமரை மொட்டு வடிவத் தாழியினுள் இட்டனர்.  அதேநேரத்தில், 4 அம்சங்கள் கொண்ட ஆரோவில் சாசனத்தை ஸ்ரீ அன்னை அளித்தார். ஆரோவில் என்பது ஒரு சர்வதேச நகரமாகும். இங்கு உலகம் முழுவதிலிருந்தும் வந்து 50,000 பேர் வசிக்கக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரோவில் குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் ஒரே மாதிரியாக மயக்கும் குறிப்பிடத்தக்க பல்லுயிரியலைக் கொண்டுள்ளது. ஆரோவில்லில் வாழ்வது இயற்கையோடு தனித்தன்மை வாய்ந்த சந்திப்புகளை வழங்குகிறது, மகிழ்ச்சிகரமானது மற்றும் சவாலானது. இப்பகுதியின் மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்பு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரந்த வரிசையை வளர்க்கிறது, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு புகலிடத்தை உருவாக்குகிறது.

Read Entire Article