<h2>அட்லீ - சல்மான் கான்</h2>
<p dir="ltr">ஜவான் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் உடன் அட்லீ கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தப் படத்திற்கு அட்லீ இயக்குநர் சம்பளமாக 80 கோடி கேட்டதால் இப்படத்தை தயாரிக்க இருந்த நிறுவனம் படத்தை கைவிட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அட்லீ மீண்டும் பாலிவுட் நடிகர் ஒருவரையே தனது நாயகராக தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது .</p>
<p dir="ltr">நடிகர் சல்மான் கானுக்கு அட்லீ கதை சொல்லி அதில் நடிக்க சல்மான் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அட்லீ சல்மான் கான் கூட்டணி தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.</p>