Assembly elections Ex-servicemen: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.! சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட ஆட்சியர் விடுத்த அழைப்பு

3 months ago 13
ARTICLE AD

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணியை அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணியை தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 60ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளது. எனவே ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் போதிய காவல்துறை பற்றாக்குறை காரணமாக முன்னாள் ராணுவ வீரர்களும் தேர்தல் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

நடைபெறவுள்ள 2026-சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்திட, சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 65 வயதிற்குட்பட்ட உடல் ஆரோக்கியமுள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படைவீரர்களிடமிருந்து (JCO/OR) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பித்தது எப்படி.?

எனவே, விருப்பமுள்ள சென்னை மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரர்கள் சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15 நேரில் அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு 044-22350780 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் தெரிவித்துள்ளார்.

Read Entire Article