Asia Cup 2025 Prize Money: ஆசிய கோப்பை டி20 இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு எத்தனை கோடி பரிசாக கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்:

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 147 ரன்கள் எடுத்தால் சாம்பியன் ஆகும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு எவ்வளவு பரித்தொகை கிடைக்கும் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பரிசு எத்தனை கோடி?

அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட இந்த ஆண்டு ஒன்றரை மடங்கு அதிகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 போட்டியில் பட்டம் வென்ற இலங்கை அணி இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1,77,37,020 பரிசுத் தொகையை அள்ளியது.

அதேபோல், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய அணி ரூ. 2,21,71,275 பரிசுத்தொகையை பெற்றது. இச்சூழலில் தான் இந்த ஆண்டு முதல் இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில்,ரூ. 2,66,05,530 பரிசுத் தொகையை அள்ளி குவிக்க இருக்கிறது. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 1,33,02,765 கிடைக்கும். இதனால் இந்த பரிசுத்தொகையை இந்தியா வெல்லுமா இல்லை பாகிஸ்தான் அணி வெல்லுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.