இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள், டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக பல முறை வெற்றியைத் தேடி தந்துள்ளார்.

அப்பாதான் போன் எடுப்பாரு:

இந்த நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவியின் தந்தை பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அவர் பேசியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் ஆடிக்கொண்டிருந்தேன். ஒரு சட்டை கம்பெனியில் ஷுட்டிங்கிற்கு சென்றிருந்தேன். ஷுட் முடித்து நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது இவங்க ( ப்ரீத்தி) நின்று கொண்டிருந்தாங்க. அடடா! இத்தனை நாள் நாம போன் அடிச்சோம். அப்போ எல்லாம் லேண்ட் லைன்தான். அப்போ எல்லாம் அவங்க அப்பாதான் எடுப்பாரு. குரலை கேட்கவும் பயத்துல போனை வச்சுடுவேன்.

அவங்களை பாத்து அப்படி இப்படி பேசி, லேண்ட்லைன் இருந்து செல்போன்ல பேசி, அங்கங்க சந்திப்போம். ஏனென்றால், நான் என் வாழ்க்கையில ரொம்ப வேகமாக ஓட்ற காலம். 1999ல இருந்து 2011 நாங்க கல்யாணம் பண்ற வரைக்கும், 2009ல ஒரு தடவை மீட் பண்ணோம். அதுவரை மே 26க்கு ஒரு வாட்டி கூட அவங்களுக்கு நான் வாழ்த்து சொல்லாம இருந்தது கிடையாது.

எங்க வேலை பாக்குற?

கரெக்டா போன் பண்ணி விஷ் பண்ணிடுவேன். பெரிய ஹோப் எல்லாம் இல்ல. நமக்கு இந்த ஆட்டம் கிடையாது. வேற யாராவது பொண்ணு அமைவாங்க அப்டிங்குற மைண்ட் செட்க்கு வந்துட்டேன். திடீர்னு சேந்து எல்லாம் ஒன்னா வந்துச்சு. எனக்கு பிடிச்ச ஒரு கிரிக்கெட் கிரவுண்ட் இருக்குது அங்கதான் கூப்பிட்டு போயி ப்ரபோஸ் பண்ணேன் ராத்திரி.

அவங்க அப்பா கேட்டாரு. எங்க வேலை பாக்குறீங்கனு? கேட்டாரு. இந்தியா சிமெண்ட்ஸ்ல வேலை பாக்குறேனு சொன்னேன். சம்பளம் எவ்வளவுனு கேட்டாரு. 65 ஆயிரம் சம்பளம்னு சொன்னேன். அவருக்கு என்னையை ஒன்னுமே தெரியல. நான் என்னடி நீ இப்படி இருக்குற? உங்கப்பனும் இப்படி இருக்குற?னு சொன்னேன். உலகக்கோப்பை மேட்ச் எல்லாம் வந்து பாத்தாங்க. அவங்களுக்கு ஒன்னுமே தெரியாது. வீட்லயே இருக்கமாட்டேனு சொல்லுவாங்க. அப்புறம் என்கூடவே ட்ராவல் பண்ற மாதிரி இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ப்ரீத்தியை அஸ்வின் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அகிரா, ஆத்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அஸ்வின் தற்போது சிஎஸ்கே அணிக்காக வரும் சீசனில் களமிறங்க உள்ளார்.