ஆடவர் இந்திய அணியைப் போலவே மகளிர் இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு அணிகளுடன் மோதி சிறப்பாக ஆடி வருகிறது. இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.

33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகம்:

இரு அணிகளும் முதல் ஒருநாள் போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக ஆஷா ஷோபனா முதன்முறையாக களமிறங்கியுள்ளார்.

மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் ஆர்.சி.பி. அணிக்காக சிறப்பாக ஆடி அந்த அணி சாம்பியன் பட்டம் பெற முக்கிய பங்காற்றியவர் ஆஷா ஷோபனா. 33 வயதான அவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதால் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆஷா ஷோபனா இன்று அறிமுகம் ஆகியிருந்தாலும், டி20 போட்டிகளில் ஏற்கனவே இந்திய அணிக்காக அவர் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டார்.

𝘼 𝙢𝙤𝙢𝙚𝙣𝙩 𝙩𝙤 𝙧𝙚𝙢𝙚𝙢𝙗𝙚𝙧 𝙛𝙤𝙧 𝘼𝙨𝙝𝙖 𝙎𝙤𝙗𝙝𝙖𝙣𝙖!😊

She makes her ODI debut & receives her #TeamIndia cap 🧢 from captain @ImHarmanpreet 👏

Follow The Match ▶️ https://t.co/EbYe44lnkQ#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/MykW40yK6V

— BCCI Women (@BCCIWomen) June 16, 2024

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் இந்திய அணிக்காக அறிமுகமானார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1991ம் ஆண்டு பிறந்த ஆஷா ஷோபனா ஆர்.சி.பி. அணி மட்டுமின்றி கேரள மகளிர் அணி, பாண்டிச்சேரி மகளிர் அணி, ரயில்வே மகளிர் அணி, பி.சி.சி.ஐ. மகளிர் அணி, இந்திய ஏ அணிகளுக்காக ஆடிய அனுபவம் வாய்ந்தவர்.

தீப்தி ஷர்மாவுக்கு 200வது போட்டி:

தனது முதல் போட்டியில் ஆஷா ஷோபனா அறிமுகமாகியுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை தீப்தி ஷர்மா தனது 200வது போட்டியில் களமிறங்கியுள்ளார். தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ள ஆஷா ஷோபனாவிற்கும், 200வது சர்வதேச போட்டியில் ( டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் உள்பட) ஆடும் தீப்தி ஷர்மாவிற்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது. ஸ்மிரிதி மந்தனா 117 ரன்களுடனும், தீப்தி ஷர்மா 37 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர்.