பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு உயர் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், சமத்துவ வழக்கறிஞர் சங்கம், நீலம் சட்ட மையம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது, வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.