இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சேலத்தில் செய்தியாளர்களின் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி சேலம் அயோத்தியபட்டினத்தில் சிறப்பாக கொண்டாடப்படும். நாடு முழுவதும் ராமர் நவமி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆனால் சேலத்தில் காவல்துறை ராமநவமிக்கு தடை விதித்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்ற போது நேரம் மாற்றிக் கொள்ளுங்கள், தேதியை மாற்றிக் கொள்ளுங்கள் என்றனர். மே 4ம் தேதி ராமநவமி விழா திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறினார்.

நாடு முழுவதும் வக்ஃபு மசோதா வரவேற்பை பெற்று உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் வக்ஃபு சொத்து என்ற பெயரில், திருச்சி செந்துறை என்ற கிராமமே வக்ஃபு சொத்து என்றார்கள். பவானியில் கோவிலைத் தவிர மற்ற இடங்கள் வக்ஃபு சொத்து என்றார்கள். ‌ இது போன்ற தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கு நிலங்கள் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிலங்களை வக்ஃபு சொத்து என்ற கூறினார்கள். வக்ஃபு மசோதா வந்த பிறகு இவற்றிற்கு தீர்வு கிடைத்துள்ளது. விடுதலை சிறுத்தைகள், திமுக போன்ற அமைப்புகள் மட்டும் தான் இந்த சட்டத்தை எதிர்க்கிறது. பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த வக்ஃபு சட்டத்திற்கு ஆதரவளிக்கின்றனர். முஸ்லிம்களை ஏற்றுக் கொண்ட பிறகு திமுக மதவாத அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

இதேபோன்று, உச்சநீதிமன்றம் இரண்டு முக்கிய தீர்ப்புகள் வந்துள்ளது. ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்கிறார் என்று வழக்கு தொடுத்தனர். அதற்கு உச்சநீதிமன்றம் 142 சட்ட பிரிவை பயன்படுத்தி 10 மசோதாக்களை நிறைவேறியதாக அறிவித்துள்ளனர்.

இதேபோல், தமிழக உயர்நீதிமன்றம் 6 கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளனர். டாஸ்மாக் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டுவிட்டு, உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள்? எனக் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அரசுத் துறையான டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடத்துவது இ.டி சோதனை நடத்துகிறது. டாஸ்மாக் ஊழல் வழக்கில் காலம் தாழ்த்துவதற்கு உயர்நீதிமன்றம் சென்ற திமுக அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்து உள்ளது.

தமிழக ஆளுநர் மக்கள் நலன் திட்டங்கள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடியாக ஒப்புதல் வழங்கி இருக்கிறோம். ஆனால் பல்கலைக்கழகம் மசோதா, நீட் விலக்கு மசோதா இது போன்ற அரசியல் சார் மசோதாக்கள் மட்டுமே நிறுத்தி வைத்திருந்தார். இதனை ஆளுநர் கூறிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வோர் என்று கூறினார். பல்கலைக்கழக வேந்தராக முதல்வர்கள் இருக்கலாம் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டம் கொண்டு வந்தார். அப்போது திமுக பொதுச்செயலாளராக இருந்தார் அன்பழகன் இதனை கடுமையாக எதிர்த்தார். இது மட்டுமின்றி நீதிமன்றத்திற்கும் திமுக சென்றது. ஆனால் தற்போது திமுக இரட்டை வேடம் போடுகிறது. கடந்த காலத்தில் துணைவேந்தர் நியமனங்களில் பணத்தைப் பெற்றுக் கொண்டு பதவியை கொடுத்தனர். பாஜக ஆட்சி அமைந்த உடன் கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். அதனால் திமுகவிற்கு இது தற்காலிக வெற்றி. இதற்கான உரிய சட்ட போராட்டத்தை ஆளுநர் நடத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

ஜிஎஸ்டி குறித்து தப்பான பிரச்சாரத்தை முன்வைத்து வருகின்றனர். ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்துள்ளது. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம் அதன் எளிமையான அணுகுமுறை. இருபது லட்ச ரூபாய் வரை எந்த வியாபாரம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் அதற்கு வரி கிடையாது. போட்டோர இட்லி கடைகளுக்கு யாரும் ஜிஎஸ்டி போடவில்லை. பெரிய உணவகங்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி போடப்படுகிறது. பெரிய உணவகங்களில் பிராண்டான பொருட்களை சாப்பிடும் போது அதற்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்று கூறினார்.

திமுக ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி. ஆங்கிலேயர் காலத்தில் கூட மனு அளிப்பதற்கும், போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி இருந்தது. மிசா காலத்தில் கூட இந்திரா காந்தியை எதிர்த்து பேசுவதற்கு சுதந்திரம் இருந்தது. ஆனால் தற்போது உள்ள திமுக ஆட்சியில் ஒரு அனிமேஷன் புகைப்படம் வெளியிட்டால் கூட அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டில் பிஜேபி, இந்துத்துவா வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.

பாஜக தலைவர் பதவி குறித்து கேள்விக்கு, அண்ணாமலை நிச்சயமாக பாஜகவின் நல்ல தலைவராக இருப்பார். மாநில தலைவர் பொறுப்பு பொருத்தவரை பிஜேபி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவரை மற்றும். பாஜக ஒரு கட்டுப்பாடான கட்சி. அண்ணாமலை செல்வாக்கு அவரது அணுகுமுறையால் அவர் பிஜேபியின் அடையாளமாக மாறி உள்ளார். தலைவர் பதவியை மாற்றினாலும் அண்ணாமலை திமுகவை எதிர்த்து அரசியல் செய்வார் என்று கூறினார்.