Arasu Bus : ‘நிற்காமல் சென்ற அரசு பேருந்து’ ஸ்கூட்டியை எடுத்து துரத்திச் சென்று நிறுத்திய பெண்..!

4 months ago 10
ARTICLE AD

பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் ஆவேசமடைந்த பெண் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு, பேருந்தை துரத்துச் சென்று வழி மறித்து நிறுத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கு நடந்த சம்பவம்?

தமிழகத்திலுள்ள கிராமப் பகுதிகளில் அரசு பேருந்துகள் பல இடங்களில் நிற்காமல் செல்வது தொடர்பாக போக்குவரத்துறைக்கு பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக சென்று வருகின்றன. குறிப்பாக, பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் அதிகமாக நிறுத்தத்தில் நின்றால் சில பேருந்து ஓட்டுநர்கள் அங்கு நிறுத்தாமல் செல்வதும் தொடர் வாடிக்கையாக மாறி வருகிறது. இந்நிலையில், ஆற்காடு வாலாஜாபேட்டை  சிப்காட் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்வதாக மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

நிற்காமல் சென்ற பேருந்து – துரத்தி சென்ற பெண்

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு கிராமத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இன்று அப்பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பாணவரத்தில் இருந்து முக்கிய வழித்தடமாக ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்து செங்காடு பேருந்து நிறுத்தத்தில் கிராம பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தும் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் அரசு பேருந்து ஓட்டுநர் அலட்சியத்துடன் பேருந்து வேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால்,ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம பெண்மணி ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு, வேகமாகச் சென்று பேருந்து, அந்த பேருந்தை வழி மறித்து நிறுத்தி ஏன் பேருந்தை நிறுத்தாமல் செல்கிறீர்கள் ? எதற்கு இப்படி செய்கிறீர்கள் ? என்று  பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். கிராம மக்களுடன் அந்த பெண்ணுக்கு ஆதரவாக சென்று பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த காட்சிகள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு ?

இதுபோன்று சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் தான்தோற்றிதனமாக செயல்படுவதாகம் இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற சம்பங்களை குறிப்பெடுத்து அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்தாத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Read Entire Article