<p>நிர்மலா சீதாராமனிடம் அன்னப்பூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். </p>
<p>இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணிக உரிமையாளருக்கும் எங்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடல் வீடியோவை பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். </p>
<p>அன்னபூர்ணா உணவகங்களின் மதிப்பிற்குரிய உரிமையாளரான சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். </p>