இசையமைப்பாளர் அனிருத் - தொழிலதிபர் காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான தேதி குறிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனிருத் - காவ்யா மாறன் காதல்

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனும் காதலிப்பதாக கடந்த ஓராண்டாகவே தகவல்கள் வெளியானது.

கடந்த 2025ம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் அனிருத், காவ்யா தரப்பு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர வீதிகளில் இருவரும் மிகவும் சாதாரணமாக, பேசிக்கொண்டே நடந்து சென்ற காட்சி ஒரு வீடியோ காட்சியில் பதிவாக அவ்வளவு தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகரும், அனிருத்தின் நெருங்கிய உறவினருமான ஒய்.ஜி. மகேந்திரன் அனிருத், காவ்யா மாறன் திருமணம் பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தார். ஆனால் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் காவ்யா மாறனுடனான திருமணம் பற்றிய கேள்விக்கு, “திருமணமா? சிரிப்பாக இருக்கிறது.. வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இந்த காதல் திருமணத்தில் போய் முடிவடைந்துள்ளது.

Sun Group Chairman Shri Kalanithi Maran and his wife, Smt. Kavery Maran, met Hon’ble Chief Minister Shri A. Revanth Reddy at his residence in Jubilee Hills and invited him to the wedding reception of their daughter, Kavya Maran. The wedding reception of Kavya Maran and Anirudh Ravichander is scheduled to be held in Chennai on November 21. #KalanithiMaran #KavyaMaran

— Telangana CMO (@TelanganaCMO) October 16, 2026

கிரீஸில் திருமணம் - சென்னையில் வரவேற்பு

அதன்படி அனிருத் - காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நவம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நவம்பர் 21ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியை தெலங்கானா முதல்வர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டில் நடக்கும் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். அதேசமயம் வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல்,சினிமா, தொழில்துறை, விளையாட்டு என பலதுறை சார்ந்த பிரபலங்களும் வருகை தரவுள்ளார். தற்போது திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கும் பணிகளை இரு குடும்பத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அக்டோபர் 15ம் தேதி வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை காவ்யா மாறன் - அனிருத் இணைந்து சென்னை வெற்றி திரையரங்கில் கண்டுகளித்தனர். இதன் புகைப்படம், வீடியோ வைரலானது.

அனிருத் - காவ்யா மாறன் இருவரும் வசதியான குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பேட்ட, பீஸ்ட், திருச்சிற்றம்பலம், ஜெயிலர், கூலி, டிசி, ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்தார். இதன்மூலம் காவ்யா மாறனுடன் கிடைத்த நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.