Angelo Mathews Retires: முடிவுக்கு வந்த சகாப்தம்.. ஓய்வை அறிவித்தார் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் - ஷாக்கில் ரசிகர்கள்

6 months ago 5
ARTICLE AD

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், நட்சத்திர வீரருமான ஏஞ்சலோ மேத்யூஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதை அவரே தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றார் மேத்யூஸ்:

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது. கடந்த 17 வருடங்களாக இலங்கை அணிக்காக கிரிக்கெட் ஆடியதை மிகப்பெரிய கவுரவமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். நாட்டின் சீருடையில் ஆடும்போது கிடைக்கும் தேசப்பற்றையும், சேவையும் வேறு ஏதும் ஈடு செய்யாது.  நான் கிரிக்கெட்டிற்காக முழுவதையும் அளித்துள்ளேன். கிரிக்கெட் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. என்னை இன்று இப்படி ஒரு மனிதனாகவும் மாற்றியுள்ளது.

எனது கிரிக்கெட்டின் உச்சத்திலும், சறுக்கலிலும் எனக்கு பக்கபலமாக இருந்த ஆயிரக்கணக்கான இலங்கை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஜுன் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டே நான் ஆடும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகும். அதேசமயம், நான் வெள்ளை நிற பந்தில் நாட்டிற்கு தேவைப்பட்டால் ஆடத் தயாராக உள்ளேன்.

விளையாட்டு மீதான காதல் தொடரும்:

தற்போதுள்ள அணியில் ஏராளமான திறமையான எதிர்கால நட்சத்திரங்கள் உள்ளார்கள் என்று நம்புகிறேன். கடவுளுக்கும், எனது பெற்றோர்களுக்கும், எனது அழகான மனைவி மற்றும் குழந்தைகளுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் நன்றி சொல்கிறேன். அத்தியாயம் முடிந்துவிட்டது. ஆனால், விளையாட்டின் மீதான காதல் எப்போதும் தொடரும்.

இவ்வாறு அவர் உருக்கமாக எழுதியுள்ளார்.

இலங்கை அணியின் முக்கிய வீரர்:

37 வயதான ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக உலா வந்தவர்.  இலங்கை அணிக்காக 2009ம் ஆண்டு முதன்முறையாக அறிமுகமானார். சங்ககரா, ஜெயவர்தனே, ஜெயசூர்யா, முரளிதரன், மலிங்கா, தில்ஷான், வாஸ் போன்ற ஜாம்பவான் வீரர்களுடன் இணைந்து ஆடியுள்ளார்.

சிறப்பான ஆல்ரவுண்டர்:

இவர் இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 210 இன்னிங்சில் பேட் செய்து 16 சதங்கள், 45 அரைசதங்கள், 1 இரட்டை சதத்துடன் 8 ஆயிரத்து 167 ரன்கள் எடுத்துள்ளார். 226 ஒருநாள் போட்டிகளில் 194 இன்னிங்சில் பேட் செய்து 5 ஆயிரத்து 916 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 40 அரைசதங்களும், 3 சதங்களும் அடங்கும்.  90 டி20 போட்டிகளில் 73 இன்னிங்சில் பேட் செய்து 6 அரைசதத்துடன்  1416 ரன்கள் அடங்கும்.

டெஸ்ட் போட்டிகளில் 33 விக்கெட்டுகளையும், 126 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 45 விக்கெட்டுகளையும், ஐபிஎல் போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இலங்கை அணிக்காக மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார். மேலும் பல வெளிநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் ஆடியுள்ளார். இவர் இலங்கை அணிக்கு கேப்டனாகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும், இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 2022ம் ஆண்டுக்கு பிறகு ஆடவில்லை.

Read Entire Article