Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?

6 months ago 5
ARTICLE AD

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனை்த்தும் அடுத்தாண்டு நடக்கும்  சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையிலும், கூட்டணி கணக்கிலும், வாக்காளர்களை கவர வியூகமும் வகுத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பாமக-வில் நடப்பது அந்த கட்சியினருக்கும், பாமக அடிப்படை தொண்டர்களுக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சந்திக்கு வந்த ராமதாஸ் - அன்புமணி சண்டை:

கடந்த சில வருடங்களாகவே ராமதாஸிற்கும், அன்புமணிக்கும் நடந்த மோதல் தற்போது மிகப்பெரிய அளவில் கட்சிக்குள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கூட்டணி விவகாரத்திலும், கட்சியின் முக்கிய முடிவுகளிலும் ராமதாசுக்கு முரண்பட்ட முடிவுகளை அன்புமணி எடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு வெளியாகி வந்த நிலையில், ராமதாசே இன்று வெளிப்படையாக அந்த குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தியிருப்பது பாமக மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகள்:

ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அன்புமணி மீதான நன்மதிப்பை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது. பாஜக-வுடன் கூட்டணி வைத்தது தனக்கு தெரியாதது என்றும், ஒவ்வொரு மாவட்டச்செயலாளர்களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுத்து பொய் சொன்னது என்றும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக அன்புமணியால் கடந்து வரக்கூடிய விமர்சனங்களாகவும், குற்றச்சாட்டுக்களாகவும் பார்க்கப்பட்டாலும் தனது தாய் மீதே அன்புமணி தண்ணீர் பாட்டிலை வீசி அடித்தார் என்று ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த பாமக-வையும் அதிரவைத்தது.

எப்படி சமாளிக்கப்போகிறார் அன்புமணி?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்கள் மீது நடத்தப்படும் சிறிய  வார்த்தை மோதல் கூட அரசியலிலும், கட்சியிலும், வாக்கு வங்கிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு கடந்த கால தமிழக அரசியலில் பல உதாரணங்கள் உண்டு. தமிழக அரசியலின் மிகவும் முக்கியமான தலைவர்களில் ஒருவரான அன்புமணி ராமதாஸ், தனது தாயை அடித்ததாக ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டை அன்புமணி எவ்வாறு சமாளிக்கப்போகிறார்? தனது ஆதரவாளர்களுக்கும் கட்சியினருக்கும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வாறு விளக்கம் அளிக்கப்போகிறார்? என்ற மிகப்பெரிய சவால் உள்ளது.

காத்திருக்கும் சவால்?

இது மட்டுமின்றி, அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராமதாசையும், கட்சியினரையும் சமாதானப்படுத்தி எவ்வாறு தனக்கு முழு ஆதரவை கட்சியில் திரட்டப்போகிறார்? என்ற கேள்வியும் அன்புமணி முன் எழுந்துள்ளது.

கட்சியை எதிர்காலத்தில் வழிநடத்தப்போகும் தலைவராக உருவெடுத்துள்ள அன்புமணி தன் மீது ராமதாஸ் வைத்துள்ள விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் சமாளித்து தேர்தலுக்குள் தனது கூட்டணி வியூகத்தையும் எவ்வாறு செயல்படுத்தப்போகிறார்? என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக கூட்டணியில் பாமக தொடருமா? அல்லது வேறு யாருடனும் கூட்டணி வைப்பார்களா? என்ற கேள்வியும் உள்ளது.

Read Entire Article