Anbumani Vs Ramadoss : அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி

1 month ago 5
ARTICLE AD

தமிழக அரசியலில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு டப் கொடுக்கும் கட்சியாக வட மாவட்டங்களில் கெத்து காட்டிய கட்சி பாமக,  வட மாவட்டங்களில் எம்எல்ஏ அல்லது எம்பி வெற்றி பெறுவதாக இருந்தால் பாமகவின் உதவி கட்டாய தேவையாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்வியால் பாமக பின்தங்கியது. இந்த நிலையில் தான் அடுத்த திருப்பமாக பாமகவில் தந்தை - மகன் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாமக நிர்வாகிகள் இரண்டு தரப்பாக பிரிந்துள்ளனர். ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கியும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கட்சி யாருக்கு.? கட்சி சின்னம் யாருக்கு என்ற போட்டியானது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நீதிமன்றத்திற்கு பாமக தொடர்பான வழக்கு சென்றுள்ளது. பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக்கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி தர்மபிரபு முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது,  அன்புமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ராமதாஸ் மனுவை நிராகரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யபட்டது.

அதில்,  பாமக நிறுவனரான ராமதாஸ்க்கு தற்போது 87 வயது ஆகி விட்டது, வயது மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் கட்சியின் நிர்வாக முடிவுகளை உரிய முறையில் எடுக்க முடியாத  நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்தி சிலர் ராமதாஸை தவறாக வழிநடத்துவதாகவும்,  சில தனி நபர்கள் பாமக கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராமதாஸ் தன்னத்தானே பாமக தலைவராக அறிவித்துக்கொண்டது சட்ட விதிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பா.ம.கவின் நிறுவனர் என்ற அடிப்படையில் பாமக கட்சியில் ஆலோசனை வழங்கவும் கட்சியின் வழிகாட்டுதல்  மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால் கட்சியின் முடிவுகளை எடுக்க பாமகவின் பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    எனவே ராமதாஸ் தொடர்ந்த இந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும்,

பாமக கட்சியில் உரிமை கோரி வழக்கு தொடர நிறுவனருக்கு உரிமை, அதிகாரம் இல்லையெனவும் எனவே ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அன்புமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அன்புமணி தாக்கல்  செய்த  மனுவுக்கு மார்ச் 11 ம் தேதிக்குள் ராமதாஸ் தரப்பில் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

Read Entire Article