<p><strong>Ammonia Gas Leakage:</strong> தூத்துக்குடியில் தனியார் ஆலையில் இருந்து அம்மோனியா வாயு கசிந்ததால் பொதுமக்களுக்கு மூச்சுதிணறல் பாதிப்பு ஏற்பட்டது.</p>
<p>புதூர் பாண்டியாபுரத்தில் இயங்கி வரும் ”நிலா கடல் உணவுகள்” என்ற தனியார் மீன் பதன ஆலை செயல்பட்டு வருகிறது. அதில் இருந்த கேஸ் சிலிண்டர் நேற்று இரவு 11 மணியளவில் வெடித்து அமோனியா வாயு கசிந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டு அங்கிருந்த ஊழியர்களில் 25 பேர் மூச்சு திணறலுக்கு ஆளாகி மயக்கமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p>