Amma Unavagam: அம்மா உணவகம் இட்லி ஹோட்டல்களுக்கு விற்பனை.. பார்சலுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு!

4 months ago 8
ARTICLE AD

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அம்மா உணவகம் இட்லி ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

அம்மா உணவகம்

கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம் அப்போதைய முதலமைச்சரான ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. மலிவு விலையில் ஏழை மக்களின் பசியைப் போக்கும் வண்ணம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் எதிர்பாராத வகையில் ஒரு வரவேற்பை பெற்றது. ரூ.1க்கு இட்லி தொடங்கி, ரூ.3க்கு எலுமிச்சை, கருவேப்பிலை தயிர் சாதம், ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3 க்கு இரண்டு சப்பாத்திகள் என உணவுகள் விற்பனை செய்யப்பட்டது.

அம்மா உணவகத்தில் பார்சல்கள் வழங்கப்படாமல் நேரடியாக வந்து உணவு சாப்பிடும் நடைமுறை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் பின்னால் மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து பாத்திரம் கொண்டு வந்து உணவு பெறும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. 2013 முதல் 2021 அதிமுக ஆட்சி வரை அம்மா உணவகங்கள் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டன.

திமுக ஆட்சியில் வீழ்ச்சி

2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டாலும் பெரிய அளவில் அரசால் கவனத்தில் கொள்ளப்படவில்லை. நஷ்டத்தில் இயங்குவதாக கூறி பல இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டன. பெரிய அளவில் மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் முந்தைய அதிமுக அரசு நஷ்டத்தில் இயங்கினாலும் மக்களின் பசியை போக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

விஜய் போட்ட உத்தரவு

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றார். அவர் அம்மா உணவகங்களில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், தரமான உணவு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இது பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

Also Read: உயிரியல் பூங்கா உங்க அப்பன் வீட்டு சொத்தா? .. தத்தி முதல்வர் விஜய்.. சரமாரியாக திமுக விமர்சனம்!

வெளி ஹோட்டல்களுக்கு விற்பனை

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே செயல்படும் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லி அங்குள்ள ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சுமார் 1200 இட்லி நாளொன்று தயாரிக்கப்பட்ட நிலையில் அது அரைமணி நேரத்திலேயே காலியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் பசியாற வந்த எழை, எளிய மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். புகாரைத் தொடர்ந்து அம்மா உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்குள்ள ஊழியர்கள் இதுபற்றி எங்களுக்கு தெரியாது. இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அம்மா உணவகத்தில் பார்சலுக்கு பல மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். உடனடியாக இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read Entire Article