விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. அதேபோல் பாமக, அமமுக, புதிய நீதிக்கட்சி, புரட்சிப்பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளது. இதனிடையே தமிழக அரசியலில் முதல்முறையாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் திமுக கூட்டணியை வீழ்ந்த விஜயை தங்கள் கூட்டணியில் கொண்டு வர பாஜக டெல்லி தலைமை முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அதிமுக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்ட ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் மறுத்தனர். எனினும் விஜய் தனித்து போட்டி என்பதை உறுதிப்படுத்தினார். இதனால் தமிழ்நாட்டில் 6 முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் தனியார் ஊடக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமித்ஷா பங்கேற்றார். அப்போது தமிழ்நாட்டில் பாஜக செயல்படும் வியூகம் குறித்து பேசினார். அதாவது, “தமிழ்நாட்டில் தனி ஒருவராகப் போட்டியிடுவதற்குப் பதிலாக அங்கு ஏற்கனவே பெரிய அண்ணன் போன்று வலுவாக இருக்கும் சார்ந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் கட்சிக்கு அமைப்பு ரீதியான பலம் இன்னும் குறைவாகவே உள்ளது. அதிமுக எங்களுடைய முதன்மை கூட்டாளி. அவர்களுடன் பாஜக தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாஜக மாநிலங்களில் உள்ள சிறிய கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அதேபோல் திமுக அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் திமுகவுக்கு எதிராகப் பெரும் ஆட்சி எதிர்ப்பு அலை நிலவுவதை நான் காண்கிறேன். அவர்கள் வெறுப்பு அரசியலைப் பரப்பியுள்ளனர். எனவே தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவரிடம் தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அப்படியான எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. நாங்கள் அதை முயற்சியும் செய்யவில்லை. அவர் எங்களுடன் வந்தால், எங்கள் வாக்கு வங்கியில் அதன் விளைவு எதிர்மறையாகவே இருக்கும் என்று நான் உணர்கிறேன்” என அமித்ஷா கூறியுள்ளார்.

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கூட்டணி வைக்க 90 இடங்கள், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதனை விஜய் மறுத்ததாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.